முகப்பு /செய்தி /விளையாட்டு / ஐபிஎல் டிக்கெட் கள்ளச்சந்தையில் விற்பனை - சென்னையில் 13 பேர் கைது

ஐபிஎல் டிக்கெட் கள்ளச்சந்தையில் விற்பனை - சென்னையில் 13 பேர் கைது

மாதிரி படம்

மாதிரி படம்

CSK vs DC Tickets | சேப்பாக்கம் மைதானத்தை சுற்றியுள்ள பகுதிகளில் தீவிரமாக கண்காணித்து மோசடி நபர்களை கைது செய்த காவல்துறை

  • Last Updated :
  • Chennai, India

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை நடைபெற உள்ள ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட்டுகளை கள்ளச்சந்தையில் விற்பனை செய்த 13 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை, டெல்லி அணிகளுக்கு இடையே நாளை நடைபெறும் ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை நேற்று காலை தொடங்கி மூன்று மணி நேரத்தில் விற்றுத் தீர்ந்தது.இந்நிலையில், இந்த போட்டிக்கான டிக்கெட்டுகளை கள்ளச் சந்தையில் சட்ட விரோதமாக விற்பனை செய்வதாக எழுந்த புகாரின் பேரில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டார்.

இதையும் படிங்க: IPL 2023 : கடைசி பந்து வரை நீடித்த த்ரில்லர் மேட்ச்… பஞ்சாபை 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது கொல்கத்தா அணி

top videos

     சேப்பாக்கம் மைதானத்தை சுற்றியுள்ள பகுதிகளில் தீவிரமாக கண்காணித்து, அங்கு ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட்டுகளை கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்த 13 பேரை கைது செய்தனர். அருண்குமார், ஏசுராஜ், இம்ரான் உள்ளிட்ட அந்த 13 பேர் மீதும் 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து 17 டிக்கெட்டுகள் மற்றும் 77 ஆயிரம் ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    First published:

    Tags: CSK, Delhi Capitals, IPL 2023