முகப்பு /செய்தி /விளையாட்டு / தொடர்ந்து 10 சீசன்களாக முதல் போட்டியில் தோல்வி… வெற்றிப் பாதைக்கு இன்று திரும்புமா மும்பை அணி?

தொடர்ந்து 10 சீசன்களாக முதல் போட்டியில் தோல்வி… வெற்றிப் பாதைக்கு இன்று திரும்புமா மும்பை அணி?

மும்பை இந்தியன்ஸ் அணி.

மும்பை இந்தியன்ஸ் அணி.

ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை அணியில் டிம் டேவிட், சூர்யகுமார், இஷான் கிஷன், ஜோஃப்ரா ஆர்ச்சர், கேமரூன் க்ரின் உள்ளிட்ட திறமை மிக்க வீரர்கள் உள்ளனர்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி கடந்த 10 ஆண்டுகளாக தான் விளையாடிய முதல் போட்டியில் தோல்வியை மட்டுமே சந்தித்து வருகிறது. பெங்களரு அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்று மும்பை வெற்றிப் பாதைக்கும் திரும்புமா? 10 ஆண்டுகால மோசமான ரிக்கார்டை முடிவுக்கு கொண்டு வருமா என்ற எதிர்பார்ப்பில் மும்பை ரசிகர்கள் உள்ளனர். ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி 5 முறை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி பெருமை சேர்த்துள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த வெள்ளியன்று தொடங்கியுள்ள நிலையில் இன்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இன்றைய ஆட்டம் மும்பை இந்தியன்ஸிற்கு முதல் போட்டியாகும். பல சாதனைகளை ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை அணி ஏற்படுத்தியிருந்தாலும் கடந்த 10 ஆண்டுகளாக அதாவது 2013-ஆம் ஆண்டிலிருந்து தான் பங்கேற்கும் முதல் போட்டியில் தோல்வியை மட்டுமே மும்பை இந்தியன்ஸ் அணி சந்தித்து வருகிறது. இன்றைய ஆட்டத்தில் மும்பை எதிர்கொள்ளப் போகும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வலிமை வாய்ந்த அணிகளில் ஒன்றாக கருதப்படுகிறது. கேப்டன் ஃபாஃப் டூப்ளசிஸ் தலைமையிலான இந்த அணியில் விராட் கோலி, மேக்ஸ் வெல், ஜோஷ் ஹேசல்வுட் உள்ளிட்ட முக்கிய ஆட்டக்காரர்கள் உள்ளனர்.

இன்றிரவு 7.30 மணிக்கு இந்த போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் தொடங்கவுள்ளது. ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை அணியில் டிம் டேவிட், சூர்யகுமார், இஷான் கிஷன், ஜோஃப்ரா ஆர்ச்சர், கேமரூன் க்ரின் உள்ளிட்ட திறமை மிக்க வீரர்கள் உள்ளனர். இந்நிலையில் முதல் போட்டியை வெற்றியுடன் மும்பை அணி தொடங்குமா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.

மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள்

ரோஹித் சர்மா (கேப்டன்), டிம் டேவிட், ராமன்தீப் சிங், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், டெவால்ட் ப்ரீவிஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர், அர்ஜுன் டெண்டுல்கர், அர்ஷத் கான், குமார் கார்த்திகேயா, ஹிருத்திக் ஷோக்கீன், ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப், ஆகாஷ் மத்வால், கேமரூன் கிரீன் , பியூஷ் சாவ்லா, துவான் ஜான்சன், விஷ்ணு வினோத், ஷம்ஸ் முலானி, நேஹால் வதேரா, ராகவ் கோயல்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீரர்கள்

top videos

    ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்), விராட் கோலி, சுயாஷ் பிரபுதேசாய், ரஜத் படிதார், தினேஷ் கார்த்திக், அனுஜ் ராவத், ஃபின் ஆலன், கிளென் மேக்ஸ்வெல், வனிந்து ஹசரங்கா, ஷாபாஸ் அகமது, ஹர்ஷல் படேல், டேவிட் வில்லி, கர்ன் ஷர்மா, மஹிபால் லோம்ரோர், முகமது சிராஜ், முகமது சிராஜ் ஹேசில்வுட், சித்தார்த் கவுல், ஆகாஷ் தீப், ரீஸ் டாப்லி, ஹிமான்ஷு சர்மா, மைக்கேல் பிரேஸ்வெல், மனோஜ் பந்தகே, ராஜன் குமார், அவினாஷ் சிங், சோனு யாதவ்.

    First published:

    Tags: IPL, IPL 2023