உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நாளை மறுதினம் தொடங்கவுள்ள நிலையில் அதனை நேரலையில் பார்ப்பது குறித்து இந்த பதிவில் காணலாம். ஐபிஎல் கிரிக்கெட் தொடர் பரபரப்பாக நடந்து முடிந்துள்ள நிலையில் இந்திய அணி அடுத்ததாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் விளையாடவுள்ளது. ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா இடையே 7 ஆம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் தொடங்கவுள்ள இந்த போட்டி 11 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஷ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பண்ட் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா என முக்கிய 3 ஆட்டக்காரர்கள் இல்லாமல் இந்தியஅணி இந்த போட்டியில் விளையாடவுள்ளது. மேலும் ஆடும் லெவெனில் யார் யாரெல்லாம் இந்திய அணியில் இருப்பார்கள் என்ற விவாதம் தற்போது எழுந்துள்ளது. 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் இந்த போட்டியில் டெஸ்டில் அதிக வெற்றி சதவீதத்தை பெற்ற முதல் 2 அணிகள் தகுதி பெறும். அந்த அடிப்படையில் முதலில் ஆஸ்திரேலியாவும் அதைத் தொடர்ந்து இந்தியாவும் தகுதி பெற்றன.
இதையும் படிங்க - ‘ஆசியாவின் பெஸ்ட் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்’ – பாகிஸ்தான் வீரரை புகழும் சேவாக்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் நிறுவனம் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. இதன்படி தொலைக்காட்சிகளில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களிலும், மொபைல் ஆப்பில் டிஸ்னி + ஹாட்ஸ்டாரிலும் இந்த போட்டியை நேரலையாக கண்டு ரசிக்கலாம். மொபைல் பயன்பாடு அதிகம் உள்ள தற்போதைய சூழலில் டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் போட்டியை பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.
Test Cricket-னா என்னன்னு இவங்க சொல்லிட்டாங்க
உங்களுக்கு Test Cricket-னா என்ன ? Comments-ல சொல்லுங்க 👇
📺 காணுங்கள் Follow The Blues | இன்று | Star Sports தமிழில் #WTCFinalOnStar #BelieveInBlue pic.twitter.com/0UH3JXIYYD
— Star Sports Tamil (@StarSportsTamil) June 5, 2023
இதன்படி ரூ. 149 க்கு சப்ஸ்க்ரைப் செய்வதன் மூலம் மொபைலில் 3 மாதங்களுக்கு சேவையை பெறலாம். முன்னதாக ஐபிஎல் கிரிக்கெட் தொடர் முழுவதையும் ஜியோ சினிமா ஆப் இலவசமாக வழங்கியது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cricket