முகப்பு /செய்தி /விளையாட்டு / WTC Final : டிராவிஸ் ஹெட் அதிரடி சதம்… விக்கெட் எடுக்க முடியாமல் இந்திய பவுலர்கள் திணறல்

WTC Final : டிராவிஸ் ஹெட் அதிரடி சதம்… விக்கெட் எடுக்க முடியாமல் இந்திய பவுலர்கள் திணறல்

டிராவிஸ் ஹெட்

டிராவிஸ் ஹெட்

106 பந்துகளில் 14 பவுண்டரியுடன் டிராவிஸ் ஹெட் சதம் அடித்தார். ஸ்டீவன் ஸ்மித் அரைச்சதம் அடிக்க ஆஸ்திரேலிய அணி எளிதாக 250 ரன்களை கடந்துள்ளது.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரும் நிலையில் ஆஸ்திரேலிய அணியின் டிராவிஸ் ஹெட் அதிரடி சதம் அடித்துள்ளார். 106 பந்துகளில் அவர் சதம் அடிக்க, ஆஸ்திரேலிய அணி ரன் குவிப்பில் ஈடுபட்டு வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பவுலிங்கை தேர்வு செய்தார். வேகப்பந்து வீச்சுக்கு மைதானம் சாதகமாக இருக்கும் என்பதால் ஷமி, சிராஜ், உமேஷ் யாதவ் மற்றும் ஷர்துல் தாகூர் என 4 வேகப்பந்து வீச்சாளர்களுடன் இந்திய அணி இந்த போட்டியில் களம் இறங்கியது.

ஆஸ்திரேலிய அணியில் ஓபனிங் பேட்ஸ்மேன் உஸ்மான் கவாஜா ரன் ஏதும் எடுக்காமல் வெளியேற டேவிட் வார்னர் 43 ரன்களும், மார்னஸ் லபுஸ்சேன் 26 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். 24.1 ஓவரில் 76 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை ஆஸ்திரேலிய அணி இழந்திருந்தபோது, ஸ்டீவன் ஸ்மித் மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகியோர் இணைந்து பொறுப்புடன் விளையாடினர். ஸ்மித் டெஸ்ட் மேட்ச் ஆட, ஹெட் ஒன்டே மேட்ச் போல அதிரடியாக ரன்களை சேர்த்தார். பந்துகளுக்கு இணையாக அவர் ரன்களை சேர்த்ததால் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. 40 ஓவர்களை கடந்து இந்த இணை சிறப்பாக ஆடிய நிலையில் அவர்களை பிரிக்க முடியாமல் இந்திய அணி பவுலர்கள் தடுமாறினர்.

106 பந்துகளில் 14 பவுண்டரியுடன் டிராவிஸ் ஹெட் சதம் அடித்தார். ஸ்டீவன் ஸ்மித் அரைச்சதம் அடிக்க ஆஸ்திரேலிய அணி எளிதாக 250 ரன்களை கடந்துள்ளது.

இந்திய அணியின் ஆடும் லெவனில் உள்ள வீரர்கள் ரோகித் சர்மா, சுப்மன் கில், செதேஷ்வர் புஜாரா, விராட் கோலி, அஜிங்யா ரஹானே, ஸ்ரீகர் பரத், ரவிந்திர ஜடேஜா, ஷர்துல் தாகூர், உமேஷ் யாதவ், முகம்மது ஷமி, முகம்மது சிராஜ்.

ஆஸ்திரேலிய அணி வீரர்கள் டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுஸ்சேன், ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், கேமரூன் கிரீன், அலெக்ஸ் கேரி (கீப்பர்), பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், நாதன் லயோன், ஸ்காட் போலண்ட்.

First published:

Tags: Cricket