உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில், இந்திய அணியின் சீனியர் பேட்ஸ்மேன்கள் ரன் குவிக்க வேண்டும் என்று, தேர்வுக்குழு முன்னாள் தலைவர் விமர்சித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டி அடுத்த மாதம் 7 ஆம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் தொடங்கவுள்ளது. இதில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்த உற்சாகத்துடன் இந்திய அணி ஆஸ்திரேலியாவை 7 ஆம் தேதி எதிர்கொள்கிறது.
இந்த போட்டியில் ஜஸ்பிரித் பும்ரா, ஷ்ரேயாஸ் ஐயர் உள்ளிட்ட முக்கிய ஆட்டக்காரர்கள் காயம் காரணமாக விளையாடவில்லை. ரோஹித் ஷர்மா (கேப்டன்), ஷுப்மான் கில், சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி, அஜிங்க்யா ரஹானே, கே எல் ராகுல், கே.எஸ். பரத் (விக்கெட் கீப்பர்.), ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், ஷர்துல் தாக்கூர், முகமது. ஷமி, முகமது. சிராஜ், உமேஷ் யாதவ், ஜெய்தேவ் உனத்கட் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்கள். இவர்களில் விராட்கோலி, முகமது சிராஜ் உள்ளிட்ட வீரர்கள் லண்டன் புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
இந்நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டி குறித்து தேர்வுக்குழு முன்னாள் தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத் பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது- 2019 உலகக்கோப்பை தொடருக்கு முன்பாக ரோஹித் சர்மா ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடவில்லை. ஆனால் உலகக்கோப்பை தொடரில் அவர் 5 சதங்களை அடித்துள்ளார். இந்திய அணியில் மிகவும் அனுபவம் மிக்க மூத்த ஆட்டக்காரராக ரோஹித் சர்மா இருக்கிறார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியிலும் அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கிறேன். முகமது ஷமி மற்றும் முகமது சிராஜ் நல்ல ஃபார்மில் உள்ளனர். இவர்களுடன் அஷ்வின், ஜடேஜா இணைந்தால் அணியின் பலம் அதிகரிக்கும். ரோஹித் சர்மா, ரஹானே, புஜாரா, விராட் கோலி உள்ளிட்ட சீனியர் வீரர்கள் ரன்கள் எடுக்க வேண்டும். சுப்மன் கில் போன்ற இளம் வீரர்களின் தலையில் பாரத்தை ஏற்றக் கூடாது. சீனியர் வீரர்களை ரன்களை எடுத்தால் அவர்களை இளம் வீரர்கள் பின்பற்றுவார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cricket