முகப்பு /செய்தி /விளையாட்டு / WTC Final : 60 ஓவர்களாக ஆஸி.க்கு விக்கெட் விழவில்லை… சோர்ந்து போனது இந்திய அணி…

WTC Final : 60 ஓவர்களாக ஆஸி.க்கு விக்கெட் விழவில்லை… சோர்ந்து போனது இந்திய அணி…

60 ஓவர்களுக்கும் அதிகமாக களத்தில் நிற்கும் ஸ்டீவன் ஸ்மித் மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகியோர் 4 ஆவது விக்கெட்டிற்கு 251 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்துள்ளனர்

60 ஓவர்களுக்கும் அதிகமாக களத்தில் நிற்கும் ஸ்டீவன் ஸ்மித் மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகியோர் 4 ஆவது விக்கெட்டிற்கு 251 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்துள்ளனர்

60 ஓவர்களுக்கும் அதிகமாக களத்தில் நிற்கும் ஸ்டீவன் ஸ்மித் மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகியோர் 4 ஆவது விக்கெட்டிற்கு 251 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்துள்ளனர்

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் 60 ஓவர்களுககும் மேலாக ஆஸ்திரேலிய அணி வீரர்கள் விக்கெட்டை பறி கொடுக்காமல் விளையாடினர். 5 பவுலர்கள் மாற்றி மாற்றி பந்துவீசியும் விக்கெட் விழாத நிலையில் இந்திய அணியினர் சோர்ந்து போனார்கள். 85 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு ஆஸ்திரேலிய அணி 327 ரன்கள் சேர்க்க, அத்துடன் இன்றைய முதல் நாள் போட்டி நிறைவடைந்தது.

24,1 ஓவரில் 76 ரன்களுக்கு ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது. இதன்பின்னர் இணைந்த ஸ்டீவன் ஸ்மித் மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகியோர் நங்கூரம் பாய்ச்சியவாறு விளையாடினர். இவர்களை பிரிக்க இந்திய அணியின் 5 பவுலர்கள் மாறி மாறி முயற்சித்த நிலையில் பலன் ஏதும் கிடைக்கவில்லை. ஸ்மித் டெஸ்ட் மேட்ச் ஆட, ஹெட் ஒன்டே மேட்ச் போல அதிரடியாக ரன்களை சேர்த்தார். பந்துகளுக்கு இணையாக அவர் ரன்களை சேர்த்ததால் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. 40 ஓவர்களை கடந்து இந்த இணை சிறப்பாக ஆடிய நிலையில் அவர்களை பிரிக்க முடியாமல் இந்திய அணி பவுலர்கள் தடுமாறினர்.

106 பந்துகளில் 14 பவுண்டரியுடன் டிராவிஸ் ஹெட் சதம் அடித்தார். ஸ்டீவன் ஸ்மித் அரைச்சதம் அடிக்க ஆஸ்திரேலிய அணி எளிதாக 250 ரன்களை கடந்தது. தொடர்ந்து சிறப்பாக விளையாடிய இருவரும் ரன் குவிப்பில் ஈடுபட்டனர். 227 பந்துகளை எதிர்கொண்ட ஸ்மித் 14 பவுண்டரியுடன் 95 ரன்கள் எடுத்தார். 156 பந்துகளில் 1 சிக்சர் மற்றும் 22 பவுண்டரியுடன் டிராவிஸ் ஹெட் 146 ரன்கள் குவித்துள்ளார். நேற்றைய ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்துள்ள ஆஸ்திரேலிய அணி 327 ரன்கள் எடுத்துள்ளது. 60 ஓவர்களுக்கும் அதிகமாக களத்தில் நிற்கும் ஸ்டீவன் ஸ்மித் மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகியோர் 4 ஆவது விக்கெட்டிற்கு 251 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்துள்ளனர். 60 ஓவர்களாக விக்கெட் ஏதும் விழாததால் இந்திய அணியினர் சோர்வுடன் காணப்பட்டனர். நாளை 2 ஆம் நாள் ஆட்டம் நடைபெறவுள்ளது.

First published:

Tags: Cricket