முகப்பு /செய்தி /விளையாட்டு / உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் : கே.எல்.ராகுலுக்கு பதிலாக இஷான் கிஷன் அணியில் சேர்ப்பு

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் : கே.எல்.ராகுலுக்கு பதிலாக இஷான் கிஷன் அணியில் சேர்ப்பு

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி

பந்து வீச்சாளர் ஜெயதேவ் உனாட் கட்டிற்கு இடது தோளில் காயம் ஏற்பட்டுள்ளது. இதேபோன்று மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் தொடையில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை பெற்று வருகிறார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடும் இந்திய அணியின் புதிய பட்டியலை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது. இதன்படி காயமடைந்த கே.எல். ராகுலுக்கு பதிலாக இஷான் கிஷன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் விளையாட இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் தகுதி பெற்றுள்ளன. இந்த போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் அடுத்த மாதம் 7 ஆம் தேதி தொடங்கி 11 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இதற்கிடையே கடந்த 1 ஆம் தேதி நடைபெற்ற பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான போட்டியின்போது லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் காயம் அடைந்தார். இதையடுத்து அவர் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இருந்து விலகியுள்ளதாக அறிவிப்பு வெளியானது. காயத்திலிருந்து குணம் அடைய மேலும் சில வாரங்கள் ஆகும் என்பதால் கே.எல்.ராகுல் தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இடம்பெற மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ராகுலுக்கு பதிலாக அணியில் யார் இடம்பெறுவார் என்று விவாதிக்கப்பட்டு வந்த நிலையில், இஷான் கிஷனின் பெயரை பிசிசிஐ இன்று வெளியிட்டுள்ளது. அவருடன் கே.எஸ். பரத் விக்கெட் கீப்பராக அணியில் இடம்பெற்றுள்ளார். ஸ்டான்ட் பை ஆட்டக்காரர்களாக ருதுராஜ் கெய்க்வாட், முகேஷ் குமார், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

top videos

    பந்து வீச்சாளர் ஜெயதேவ் உனாட் கட்டிற்கு இடது தோளில் காயம் ஏற்பட்டுள்ளது. இதேபோன்று மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் தொடையில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை பெற்று வருகிறார். இருவரும் அணியில் இடம்பெறுவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.  உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான இந்திய அணி வீரர்கள்- ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், செதேஷ்வர் புஜாரா, விராட் கோலி, அஜிங்யா ரஹானே, கே.எஸ்.பரத், ரவிச்சந்திரன் அஷ்வின், ரவிந்திர ஜடேஜா, அக்சர் படேல், ஷர்துல் தாகூர், முகமது ஷமி, முகமது சிராஜ், ஜெயதேவ் உனாட்கட், உமேஷ் யாதவ், இஷான் கிஷன். ஸ்டான்ட் பை வீரர்கள் – ருதுராஜ் கெய்க்வாட், முகேஷ் குமார், சூர்யகுமார் யாதவ்

    First published:

    Tags: Cricket, ICC World Test Championship