முகப்பு /செய்தி /விளையாட்டு / WTC Final : 2 ஸ்பின்னர்கள் கட்டாயம் இந்திய அணியில் இடம்பெற வேண்டும்… இங்கிலாந்து முன்னாள் வீரர் ஆலோசனை

WTC Final : 2 ஸ்பின்னர்கள் கட்டாயம் இந்திய அணியில் இடம்பெற வேண்டும்… இங்கிலாந்து முன்னாள் வீரர் ஆலோசனை

மான்டி பனேசர்

மான்டி பனேசர்

ஆஸ்திரேலியா ஸ்பின் பவுலிங்கில் தொடர்ந்து தடுமாறி வருவதை பார்க்க முடிகிறது. வானிலை வெப்பமாக இருப்பதால் ஸ்பின் பவுலிங்கின்போது பந்து நன்றாக சுழல்கிறது.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணியில் 2 ஸ்பின்னர்கள் கட்டாயம் இடம்பெற வேண்டும் என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் மான்டி பனேசர் கூறியுள்ளார். ஐபிஎல் கிரிக்கெட் தொடர் பரபரப்பாக நடந்து முடிந்துள்ள நிலையில் இந்திய அணி அடுத்ததாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் விளையாடவுள்ளது. ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா இடையே 7 ஆம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் தொடங்கவுள்ள இந்த போட்டி 11 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்த போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஷ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பண்ட் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா என முக்கிய 3 ஆட்டக்காரர்கள் இல்லாமல் இந்தியஅணி இந்த போட்டியில் விளையாடவுள்ளது. மேலும் ஆடும் லெவெனில் யார் யாரெல்லாம் இந்திய அணியில் இருப்பார்கள் என்ற விவாதம் தற்போது எழுந்துள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் வெற்றிக்கு இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் மான்டி பனேசர் சிலர் ஆலோசனைகளை தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது-

இங்கிலாந்து மைதானங்கள் ஸ்பின் பவுலிங்கிற்கு ஏற்ற வகையில் இருக்கும். 2 ஸ்பின்னர்களுடன் இந்திய அணி களத்தில் இறங்கினால் ஆஸ்திரேலிய அணிக்கு கடும் நெருக்கடி கொடுக்க முடியும். ஆஸ்திரேலியா ஸ்பின் பவுலிங்கில் தொடர்ந்து தடுமாறி வருவதை பார்க்க முடிகிறது.  வானிலை வெப்பமாக இருப்பதால் ஸ்பின் பவுலிங்கின்போது பந்து நன்றாக சுழல்கிறது.

இதையும் படிங்க - பி.எஸ்.ஜி. அணியில் இருந்து லயோனல் மெஸ்ஸி வெளியேற்றம்… ரசிகர்கள் அதிர்ச்சி

இங்கு நடைபெற்று வரும் டி20 பிளாஸ்ட் தொடரிலும் கூட பந்து மிக எளிதாக சுழல்பதை பார்க்க முடிகிறது. வேகப்பந்து வீச்சாளர்களில் முகமது ஷமி மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் ஆடும் லெவனில் இருப்பார்கள். 3 ஆவது பவுலராக உமேஷ் யாதவை தேர்வு செய்யலாம். அவர் ஷர்துல் தாகூரை விட  அனுபவம் மிக்கவர். இவ்வாறு அவர் கூறினார்.

First published:

Tags: Cricket