முகப்பு /செய்தி /விளையாட்டு / உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான பரிசுத் தொகை அறிவிப்பு…

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான பரிசுத் தொகை அறிவிப்பு…

பாட் கம்மின்ஸ் - ரோஹித் சர்மா

பாட் கம்மின்ஸ் - ரோஹித் சர்மா

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி அடுத்த மாதம் 7 ஆம் தேதி தொடங்கி 11 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் விளையாட இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் தகுதி பெற்றுள்ளன.

  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி நடத்தப்படுகிறது. 2 ஆண்டுகளில் ஒவ்வொரு டெஸ்ட் அணியும் பெற்ற வெற்றி சதவீதத்தின் அடிப்படையில் முதல் 2 அணிகள் இறுதிப் போட்டிக்கு தேர்வு செய்யப்படுகின்றன. அந்த வகையில் 2022-23 ஆம் ஆண்டுக்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி அடுத்த மாதம் 7 ஆம் தேதி தொடங்கி 11 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் விளையாட இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் தகுதி பெற்றுள்ளன.

இந்த நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான பரிசுத் தொகையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி அறிவித்துள்ளது. இந்த போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணி 1.60 மில்லியன் அமெரிக்க டாலர்களை அதாவது இந்திய மதிப்பில் ரூ. 13.23 கோடியும், தோல்வியடையும் அணி 8 லட்சம் அமெரிக்க டாலர்கள் அதாவது ரூ. 6.61 கோடியும் பரிசாக பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று மற்ற இடங்களை பிடித்த அணிகளுக்கு கிடைக்கு பரிசுத் தொகை பின்வருமாறு-

3 ஆம் இடம்பிடித்த தென்னாப்பிரிக்கா – 4.50 லட்சம் அமெரிக்க டாலர்

4 ஆம் இடம்பிடித்த இங்கிலாந்து அணி – 3.50 லட்சம் அமெரிக்க டாலர்

5 ஆம் இடம்பிடித்த இலங்கை அணி – 2.00 லட்சம் அமெரிக்க டாலர்

top videos

    6 ஆம் இடம் பிடித்த நியூசிலாந்து, 7 ஆம் இடம்பிடித்த பாகிஸ்தான், 8 ஆம் இடம் பிடித்த வெஸ்ட் இண்டீஸ் மற்றும் 9 ஆம் இடம்பிடித்த வங்கதேச அணி ஆகியவை தலா 1 லட்சம் அமெரிக்க டாலர்களை பரிசாக பெறுகின்றன.

    First published:

    Tags: Cricket