உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டியில், ஆஸ்திரேலிய அணிக்கு இந்திய அணியின் சவாலாக இருப்பார் என்று ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார். ஐபிஎல் கிரிக்கெட் தொடர் பரபரப்பாக நடந்து முடிந்துள்ள நிலையில், அடுத்ததாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த போட்டி இங்கிலாந்தின் ஓவல் மைதானத்தில் வரும் 7ஆம் தேதி தொடங்கி 11 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த போட்டியில் கோப்பைக்காக இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் பலப்பரீட்சை நடத்த உள்ளன.
இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடும் என்பதால் இந்த 5 நாள் ஆட்டம் மிகுந்த பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்திய அணி குறித்து ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் பேட்டி அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது-
இளம் பேட்ஸ்மேனான சுப்மன் கில் பந்துகளை நன்றாக அடித்து ஆடுகிறார். தன்னுடைய பேட்டிங் குறித்து கில் முழுவதுமாக அறிந்து வைத்திருக்கிறார். ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்களும் சளைத்தவர்கள் கிடையாது. தொடர்ச்சியாக ஃப்ரண்ட் புட் புல் ஷாட்களை, வேக பந்துவீச்சாளர்களுக்கு எதிராக கில் அடித்து வருகிறார். அதே ஸ்டைலில் இந்த போட்டியிலும் அவர் விளையாடுவார் என்று எதிர்பார்க்கிறேன். நிச்சயமாக அவர் ஆஸ்திரேலிய அணிக்கு சவாலாக இருப்பார்.
இதையும் படிங்க - 41 ஆண்டுகால ரிக்கார்டை முறியடித்த இங்கிலாந்தின் ஒல்லி போப்… குவியும் பாராட்டு
பந்துவீச்சை பொறுத்தளவில் இந்திய அணியின் முகமது ஷமி மீது எதிர்பார்ப்பு உள்ளது. புதிய பந்து அல்லது பழைய பந்து, இந்தியா அல்லது ஆஸ்திரேலியா என எங்கு விளையாடினாலும் ஷமி தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். அவரும் ஆஸ்திரேலியாவுக்கு சவாலாக இருப்பார் என்பதில் சந்தேகம் இல்லை. இவ்வாறு ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cricket