முகப்பு /செய்தி /விளையாட்டு / ‘உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை ஆஸ்திரேலியா வெல்லும்’ – டெல்லி கேபிடல்ஸ் வீரர் நம்பிக்கை

‘உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை ஆஸ்திரேலியா வெல்லும்’ – டெல்லி கேபிடல்ஸ் வீரர் நம்பிக்கை

மிட்செல் மார்ஷ்

மிட்செல் மார்ஷ்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி லண்டனின் ஓவல் மைதானத்தில் அடுத்த மாதம் 7 ஆம் தேதி தொடங்கி 11 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது

  • Last Updated :
  • Tamil Nadu, India

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை ஆஸ்திரேலிய அணி வெல்லும் என்று டெல்லி கேபிடல்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள மிட்செல் ஸ்டார்க் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி லண்டனின் ஓவல் மைதானத்தில் அடுத்த மாதம் 7 ஆம் தேதி தொடங்கி 11 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதே அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள்தான் அடுத்து வரக்கூடிய உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரிலும் இடம்பெறுவார்க்ள என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் தற்போதைய சாம்பியன் இங்கிலாந்து, இறுதிப் போட்டியில் பங்கேற்ற நியூசிலாந்து, இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய 4 அணிகளுக்குள்ளே கடும் போட்டி காணப்படும் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் கணித்துள்ளனர். இந்நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் குறித்து டெல்லி அணியின் ஆல் ரவுண்டர் மிட்செல் மார்ஷ் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது- இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் பலம் மிக்க அணிகளாக உள்ளன. இருப்பினும் இந்தியாவுடன் ஒப்பிடும்போது ஆஸ்திரேலியா அதிக பலம் கொண்ட அணியாக இருக்கிறது. நிச்சயமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை ஆஸ்திரேலிய அணி கைப்பற்றும் என்பதில் சந்தேகமில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 19 ஆம் தேதி வரை நடைபெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் 12 இடங்களை தேர்வு செய்துள்ளது. இறுதிப் போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன. இதைத் தவிர்த்து பெங்களூரு, சென்னை, டெல்லி, தர்மசாலா, கவுகாத்தி, ஐதராபாத், கொல்கத்தா, லக்னோ, இந்தூர், ராஜ்கோட், மும்பை ஆகிய இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 46 நாட்கள் மொத்தம் 48 மேட்ச்சுகள் இந்த தொடரில் நடைபெறுகிறது. 10 அணிகள் இந்த உலகக்கோப்பை தொடரில் மோதுகின்றன.

First published:

Tags: Cricket