முகப்பு /செய்தி /விளையாட்டு / WPL : ஆர்.சி.பி.-க்கு 2ஆவது வெற்றி… 8 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் அணியை வென்றது…

WPL : ஆர்.சி.பி.-க்கு 2ஆவது வெற்றி… 8 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் அணியை வென்றது…

ஸ்மிருதி மந்தனா - டெவைன்

ஸ்மிருதி மந்தனா - டெவைன்

ஒரேயொரு ரன்னில் அதிரடி சதத்தை தவற விட்ட டெவைன் 36 பந்தில் 8 சிக்சர் 9 பவுண்டரியுடன் 99 ரன்கள் எடுத்தார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 2 ஆவது வெற்றியை இன்று பதிவு செய்துள்ளது. குஜராத் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 16 ஆவது லீக் ஆட்டம் இன்று பெங்களூரு மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையே இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீராங்கனை டங்க்ளே 16 ரன்னில் ஆட்டமிழந்தாலும் மற்றொரு வீராங்கனை வோல்வார்ட் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தார்.

42 பந்துகளை எதிர்கொண்ட அவர் 68 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சபினேனி மேகனா31 ரன்களும், ஆஷ்லே கார்டனர் 41 ரன்களும் எடுக்க 20 ஓவர்கள் முடிவில் குஜராத் ஜெயன்ட்ஸ் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 188 ரன்களை எடுத்தது. இதையடுதது 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்கை நோக்கி பெங்களூரு அணி விளையாடியது.

பெங்களூரு அணியின் தொடக்க வீராங்கனை கேப்டன் ஸ்மிருதி மந்தனா நிதானமாக விளையாட, மற்றொரு வீராங்கனை சோபியா டெவைன் சிக்சரும் பவுண்டரியுமாக பறக்க விட்டார். இருவரும் முதல் விக்கெட்டிற்கு 125 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 31 பந்தில் மந்தனா 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஒரேயொரு ரன்னில் அதிரடி சதத்தை தவற விட்ட டெவைன் 36 பந்தில் 8 சிக்சர் 9 பவுண்டரியுடன் 99 ரன்கள் எடுத்தார். எலிஸ் பெர்ரி 19, ஹீதர் நைட் 22 ரன்கள் எடுக்க 15.3 ஓவரில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த பெங்களூரு அணி வெற்றி இலக்கை எட்டியது.

First published:

Tags: WIPL