முகப்பு /செய்தி /விளையாட்டு / மகளிர் ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்கு முதல் வெற்றி… 5 விக். வித்தியாசத்தில் உ.பி. வாரியர்சை வென்றது

மகளிர் ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்கு முதல் வெற்றி… 5 விக். வித்தியாசத்தில் உ.பி. வாரியர்சை வென்றது

வெற்றி பெற்ற உற்சாகத்தில் பெங்களூரு அணி

வெற்றி பெற்ற உற்சாகத்தில் பெங்களூரு அணி

இதுவரை 6 போட்டிகளில் பெஙகளூரு அணி விளையாடியுள்ள நிலையில் முதன் முறையாக இந்த போட்டியில்தான் வெற்றி பெற்றுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பெங்களூரு அணிக்கு இன்று முதல் வெற்றி கிடைத்துள்ளது. உ.பி வாரியர்ஸ அணிக்கு எதிரானஆட்டத்தில் பெங்களூரு அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மும்பை டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா பவுலிங்கை தேர்வு செய்தார். வாரியர்ஸ் அணியின் பேட்டர்கள் கேப்டன் அலிசா ஹீலி 1 ரன்னிலும், தேவிகா வைத்யா ரன் ஏதும் எடுக்காமலும், தஹிலா மெக்ராத் 2 ரன்னிலும் ஆட்டமிழந்து அணிக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தனர். இதனால் 5 ரன்கள் எடுத்திருந்தபோது அணி 3 முக்கிய விக்கெட்டுகளை இழந்து தடுமாறிக் கொண்டிருந்தது. இன்பின்னர் கிரன் நேவ்கிருடன் இணைந்த கிரேஸ் ஹேரிஸ் பொறுப்புடன் விளையாடி விக்கெட் இழப்பை தடுத்து ரன்களை சேர்த்தார்.

கிரன் 22 ரன்னில் வெளியேற அடுத்து வந்த தீப்தி சர்மாவும் 22 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அதிரடியாக விளையாடத் தொடங்கிய கிரேஸ் ஹேரிஸ் 32 பந்தில் 2 சிக்சர் 5 பவுண்டரியுடன் 46 ரன்கள் எடுத்தார். 19.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த யு.பி. வாரியர்ஸ் அணி 135 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து 136 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி பெங்களூரு அணி விளையாடியது.  கேப்டன் மந்தனா ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.

மற்றொரு தொடக்க வீராங்கனை சோபி டெவின் 14 ரன்னிலும், எலிஸ் பெர்ரி 10 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதன்பின்னர் இணைந்த ஹீதர் நைட், கனிகா அகுஜா இணை பொறுப்புடன் விளையாடி ரன்களை எடுத்தது. ஹீதர்21 பந்தில் 24 ரன்னும், அகுஜா 30 பந்தில் 46 ரன்களும் ஆட்டமிழந்தனர். விக்கெட் கீப்பர் ரிச்சா கோஷ் 31 ரன்கள் சேர்க்க, 18 ஓவரில் 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த பெங்களூரு அணி வெற்றி இலக்கை எட்டியது. இதுவரை 6 போட்டிகளில் பெஙகளூரு அணி விளையாடியுள்ள நிலையில் முதன் முறையாக இந்த போட்டியில்தான் வெற்றி பெற்றுள்ளது.

First published:

Tags: WIPL