முகப்பு /செய்தி /விளையாட்டு / மகளிர் ஐபிஎல் : மும்பை அணிக்கு முதல் தோல்வி… யு.பி. வாரியர்ஸிடம் 5 விக். வித்தியாசத்தில் வீழ்ந்தது…

மகளிர் ஐபிஎல் : மும்பை அணிக்கு முதல் தோல்வி… யு.பி. வாரியர்ஸிடம் 5 விக். வித்தியாசத்தில் வீழ்ந்தது…

ரன் குவிப்பில் ஈடுபட்ட யு.பி. வாரியர்ஸ் அணி வீராங்கனைகள்

ரன் குவிப்பில் ஈடுபட்ட யு.பி. வாரியர்ஸ் அணி வீராங்கனைகள்

128 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்கை நோக்கி யு.பி. வாரியர்ஸ் அணியினர் விளையாடத் தொடங்கினர்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 6 போட்டிகளில் விளையாடியுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி முதன் முறையாக இன்று தோல்வியை சந்தித்துள்ளது. யு.பி. வாரியர்ஸ் அணிக்கு எதிராக இன்று நடந்த ஆட்டத்தில் மும்பை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 127 ரன்கள் மட்டுமே எடுத்தது.

மும்பையின் தொடக்க பேட்டர்களாக ஹேலி மேத்யூஸ், யஸ்திகா பட் ஆகியோர் களத்தில் இறங்கினர். 3 சிக்சர் 1 பவுண்டரியுடன் அதிரடியாக 35 ரன்களை சேர்த்து ஹேலி மேத்யூஸ் ஆட்டமிழந்தார். யஸ்திகா 7 ரன்னிலும், நேட் சீவர் 5 ரன்னிலும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 25 ரன்களும், இஸி வாங் 32 ரன்களும் எடுத்து அணியின் ஸ்கோர் உயர உதவினர். மற்றவர்கள் ஒற்றை இலக்கத்தில் வெளியேற மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 127 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதையடுத்து 128 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்கை நோக்கி யு.பி. வாரியர்ஸ் அணியினர் விளையாடத் தொடங்கினர். தொடக்க பேட்டர்கள் தேவிகா வைத்யா 1 ரன்னிலும், கேப்டன் அலிசா 8 ரன்னிலும் ஆட்டமிழந்து அணிக்கு அதிர்ச்சி கொடுத்தனர். 12 ரன்னில் கிரன் நேவ்கைர் வெளியேற யு.பி. வாரியர்ஸ் அணி 27 ரன்னில் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிக் கொண்டிருந்தது. இதன்பின்னர் இணைந்த தஹிலா மெக்ராத் – கிரேஸ் ஹேரிஸ் இணை பொறுப்புடன் விளையாடி ரன்களை சேர்த்தது. இருவரும் 4 ஆவது விக்கெட்டிற்கு 44 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். தஹிலா 38 ரன்களும், கிரேஸ் ஹேரிஸ் 39ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த தீப்தி சர்மா 13 ரன்னும், சோபி எக்லஸ்டோன் 16 ரன்னும் எடுக்க 19.3 ஓவரில் 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த யு.பி. வாரியர்ஸ் அணி 129 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

First published:

Tags: Cricket