முகப்பு /செய்தி /விளையாட்டு / மகளிர் ஐபிஎல் : ஆர்.சி.பி.-க்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி 4 விக். வித்தியாசத்தில் வெற்றி

மகளிர் ஐபிஎல் : ஆர்.சி.பி.-க்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி 4 விக். வித்தியாசத்தில் வெற்றி

மும்பை இந்தியன்ஸ் வீராங்கனை ஹேலி மேத்யூஸ்

மும்பை இந்தியன்ஸ் வீராங்கனை ஹேலி மேத்யூஸ்

மும்பையின் தொடக்க வீராங்கனைகள் ஹேலி மேத்யூஸ் – யஸ்திகா பாட்டியா அதிரடியாக விளையாடியதால் ஸ்கோ விறுவிறுவென உயர்ந்தது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 125 ரன்களை எடுத்திருந்தது. டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் பந்து வீச்சை முதலில் தேர்வு செய்தார். இதையடுத்து பெங்களூரு அணியின் தொடக்க வீராங்கனைகளாக கேப்டன் ஸ்மிருதி மந்தனா, சோபி டெவைன் விளையாடினர். டெவைன் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழக்க அடுத்து இணைந்த மந்தனா – எலிஸ் பெர்ரி இணை ரன் சேர்க்க தொடங்கியது. 24 ரன்கள் எடுத்திருந்தபோது மந்தனா ஆட்டமிழந்து வெளியேறினார். எலிஸ் பெர்ரி 26, ஹீதர் நைட் 12, கனிகா அகுஜா 12, ரிச்சா கோஷ் 29 ரன்கள் எடுத்தனர். மற்றவர்கள் ஒற்றை இலக்கத்தில் வெளியேற 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்த பெங்களூரு அணி 125 ரன்கள் எடுத்தது.

மும்பை அணி தரப்பில் அமேலியா கெர் 3 விக்கெட்டுகளையும், நேட் சீவர் ப்ரூன்ட், இஸி வோங் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதன்பின்னர் 126 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி மும்பை அணி வீராங்கனைகள் களத்தில் இறங்கினர். தொடக்க வீராங்கனைகள் ஹேலி மேத்யூஸ் – யஸ்திகா பாட்டியா அதிரடியாக விளையாடியதால் ஸ்கோ விறுவிறுவென உயர்ந்தது. ஒரு சிக்சர் 2 பவுண்டரியுடன் மேத்யூஸ் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். யஸ்திகா பாட்டியா 30 ரன்கள் சேர்த்தார். அடுத்து வந்த நேட் சிவர் 13 ரன்னும், கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 2 ரன்னும் எடுத்து அவுட் ஆகினர்.

top videos

    அடுத்து இணைந்த பூஜா வஸ்த்ராகர் – அமெலியா கெர் இணை பொறுப்புடன் விளையாடி ரன்களை சேர்த்தது. இருவரும் 5 ஆவது விக்கெட்டிற்கு 47 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். பூஜா 19 ரன்னில் வெளியேற கடைசி வரை களத்தில் நின்ற அமெலியா கெர் 31 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார். 16.3 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்த மும்பை அணி 129 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

    First published:

    Tags: WIPL