முகப்பு /செய்தி /விளையாட்டு / மகளிர் ஐபிஎல் : யு.பி. வாரியர்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் குஜராத் அணி 178 ரன்கள் குவிப்பு

மகளிர் ஐபிஎல் : யு.பி. வாரியர்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் குஜராத் அணி 178 ரன்கள் குவிப்பு

தயாளன் ஹேமலதா - ஆஷ்லே கார்டனர்

தயாளன் ஹேமலதா - ஆஷ்லே கார்டனர்

ஹேமலதா – ஆஷ்லே கார்டனர் இணை சிறப்பாக விளையாடி ரன் குவிப்பில் ஈடுபட்டது, ஹேமலதா – ஆஷ்லே கார்டனர் இணை சிறப்பாக விளையாடி ரன் குவிப்பில் ஈடுபட்டது

  • Last Updated :
  • Tamil Nadu, India

மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்று வரும் முதல் போட்டியில் யு.பி. வாரியர்ஸ் – குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதி வருகின்றன. இதில் முதலில் பேட்டிங் செய்துள்ள குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்கள் குவித்துள்ளது. மும்பை ப்ராபோன் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பேட்டிங்கை முதலில் தேர்வு செய்தது. தொடக்க வீராங்கனைகளாக சோபியா டங்ளே – லாரா வோல்வார்ட் களத்தில் இறங்கி நல்ல தொடக்கத்தை அளித்தனர்.

அணி 41 ரன்கள் எடுத்திருந்தபோது 17 ரன்களில் வோல்வார்ட் ஆட்டமிழந்து வெளியேறினார். சோபியா டங்ளே 23 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த ஹர்லின் தியோல் 4 ரன்னில் ஆட்டமிழக்க, 6 ஓவர்கள் முடிவில் 50 ரன்களை எடுத்திருந்த குஜராத் அணி 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது.

top videos

    இதன்பின்னர் ஹேமலதா – ஆஷ்லே கார்டனர் இணை சிறப்பாக விளையாடி ரன் குவிப்பில் ஈடுபட்டது. இந்த இணையை பிரிக்க .யு.பி. வாரியர்ஸ் அணியின் பவுலர்கள் மேற்கொண்ட முயற்சி உடனடியாக பலன் அளிக்கவில்லை. இருவரும் 4 ஆவது விக்கெட்டிற்கு 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 33 பந்துகளில் 3 சிக்சர் 6 பவுண்டரியுடன் ஹேமலதா 57 ரன்களை எடுத்தார். கார்டனர் 39 பந்தில் 60 ரன்கள் சேர்த்தார்.20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த யு.பி. வாரியர்ஸ் அணி 178 ரன்களை எடுத்துள்ளது. இதையடுத்து 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்கை நோக்கி யு.பி. வாரியர்ஸ் அணி களத்தில் இறங்கியுள்ளது.

    First published:

    Tags: WIPL