முகப்பு /செய்தி /விளையாட்டு / மகளிர் ஐபிஎல் : யு.பி. வாரியர்ஸ் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னறியது டெல்லி கேபிடல்ஸ்…

மகளிர் ஐபிஎல் : யு.பி. வாரியர்ஸ் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னறியது டெல்லி கேபிடல்ஸ்…

டெல்லி அணி

டெல்லி அணி

வெள்ளியன்று நடைபெறவுள்ள ப்ளே ஆஃப் எலிமினேட்டர் சுற்றில் மும்பை அணியை யு.பி வாரியர்ஸ் அணி எதிர்கொள்கிறது

  • Last Updated :
  • Tamil Nadu, India

யு.பி. வாரியர்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி கேபிடல்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் யு.பி. வாரியர்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் கடைசி லீக் போட்டியில் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பவுலிங்கை முதலில் தேர்வு செய்தது. இதையடுத்து வாரியர்ஸ் அணியின் பேட்டர்கள் கேப்டன அலிசா ஹீலி மற்றும் ஷ்வேதா செராவத் ஆகியோர் களத்தில் இறங்கினர்.

நிதானமாக விளையாடிய கேப்டன் ஹீலி 34 பந்தில் 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். செராவத் 19 ரன்னும், அடுத்து வந்த சிம்ரன் ஷேக் 11 ரன்னும் எடுத்தனர். அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய தஹிலா மெக்ராத் 2 சிக்சர் 8 பவுண்டரிகளுடன் 58 ரன்கள் குவித்தார். மற்றவர்கள் சொற்ப ரன்னில் வெளியேற 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த யு.பி. வாரியர்ஸ் அணி 138 ரன்கள் குவித்தது. 139 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய டெல்லி அணி 17.5 ஓவரில் 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்துவெற்றி இலக்கை எட்டியது.

அதிகபட்சமாக கேப்டன் மெக் லேனிங் 39 ரன்களும், மேரிசன் கேப் மற்றும ஆலிஸ் கேப்ஸி ஆகியோர் தலா 34 ரன்களும் எடுத்தனர். இந்த வெற்றியின் மூலம் டெல்லி கேபிடல்ஸ் அணி நேரடியாக மகளிர் ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. வெள்ளியன்று நடைபெறவுள்ள ப்ளே ஆஃப் எலிமினேட்டர் சுற்றில் மும்பை அணியை யு.பி வாரியர்ஸ் அணி எதிர்கொள்கிறது. இதில் வெற்றி பெறும் அணி ஞாயிறன்று நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் டெல்லியுடன் மோதும்.

First published:

Tags: WIPL