நெட் ரன் ரேட்டில் மும்பை அணியை பின்னுக்கு தள்ளி டெல்லி கேபிடல்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் வெற்றியைத் தொடர்ந்து முதன் முறையாக மகளிருக்கான டி20 கிரிக்கெட் தொடர் நடப்பாண்டு முதல் தொடங்கப்பட்டுள்ளது. இதில் டெல்லி கேபிடல்ஸ், மும்பை இந்தியன்ஸ், யு.பி. வாரியர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் ஜெயன்ட்ஸ் ஆகிய 5 அணிகள் பங்கேற்றன.
லீக் ஆட்டங்களில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் 2 ஆட்டங்களில் மோதின. தற்போது லீக் ஆட்டங்கள் முடிவு பெற்றுள்ள நிலையில் ப்ளே ஆஃப் எலிமிமேனட்டர் சுற்று வெள்ளியன்று நடைபெறவுள்ளது. இதுவரை நடந்த போட்டிகளில் அடிப்படையில் அனைத்து அணிகளும் 8 ஆட்டங்களில் விளையாடியுள்ளன. இதில் 2 வெற்றி மற்றும் -2.220 நெட் ரன் ரேட்டுடன் குஜராத் ஜெயன்ட்ஸ் அணி கடைசி இடத்தை பிடித்துள்ளது. 2 வெற்றி -1.137 ரன் ரேட்டுடன் பெங்களூரு அணி 4 ஆவது இடத்தில் உள்ளது. இந்த 2 அணிகளும் தொடரை விட்டுவெளியேறியுள்ளன.
4 வெற்றிகள் பெற்ற யு.பி.வாரியர்ஸ் அணி 8 புள்ளிகளுடன் -0.200 நெட் ரன்ரேட்டுடன் 3 ஆம் இடத்தில் உள்ளது. தொடரின் ஆரம்பம் முதலே சிறப்பாக விளையாடி 6 வெற்றிகளைப் பெற்ற மும்பை அணி 12 புள்ளிகளுடன் +1.711 நெட் ரன்ரேட்டுன் 2 ஆவது இடத்தில் உள்ளது. வெள்ளியன்று நடைபெறவுள்ள ப்ளே ஆஃப் எலிமினேட்டர் சுற்றில் மும்பை – வாரியர்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும். லீக் ஆட்டங்களில் 6 வெற்றியுடன் 12 புள்ளிகளைப் பெற்று +1.856 நெட் ரன் ரேட் வைத்துள்ள டெல்லி கேபிடல்ஸ் அணி நேரடியாக ஃபைனலுக்கு முன்னேறியுள்ளது. டெல்லி – மும்பை அணிகள் 6 வெற்றிகளைப் பெற்றபோதிலும், நெட் ரன் ரேட்டில் மும்பையை பின்னுக்கு தள்ளியுள்ளது டெல்லி கேபிடல்ஸ். மகளிர் ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி வரும் ஞாயிறன்று நடைபெறுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: WIPL