இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நாளை மறுநாள் லண்டனில் தொடங்க உள்ள நிலையில், இந்திய வீரர்கள் லண்டன் ஓவல் மைதானத்தில் கடும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
ஐசிசி டெஸ்ட் போட்டி புள்ளிகள் தரவரிசை அடிப்படையில், 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி நடத்தப்படுகிறது. 2021ஆம் ஆண்டு நியூசிலாந்து அணியிடம் தோற்ற இந்தியா, டெஸ்ட் போட்டி புள்ளிகள் அடிப்படையில் இரண்டாம் இடத்திலும், ஆஸ்திரேலியா முதலிடத்திலும் உள்ளன.
இந்நிலையில், நடப்பு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி, இங்கிலாந்தில் உள்ள லண்டன் ஓவல் மைதானத்தில் நாளை மறுநாள் தொடங்க உள்ளது. கோப்பையை கைப்பற்றும் முனைப்பில் இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி வீரர்கள், ஓவல் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டனர்.
Lights 💡
Camera 📸
Headshots ✅#TeamIndia | #WTC23 pic.twitter.com/9G34bFfg78
— BCCI (@BCCI) June 5, 2023
இந்நிலையில், ஊடக நிகழ்ச்சியில் பங்கேற்ற இந்திய கேப்டன் ரோகித் ஷர்மா, இங்கிலாந்து மைதானங்களில் விளையாடுவது கடும் சவாலானது என்றும், எனினும் ஓவல் மைதானத்தில் தலைசிறந்த ஷாட்களை அடிக்க முடியும் எனவும் கூறியுள்ளார்.
இதையும் வாசிக்க: ஃப்ரெஞ்ச் ஓபன் டென்னிஸ் : காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார் ஜோகோவிச்… நடாலின் சாதனை முறியடிப்பு
இந்நிலையில், ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் காயம் காரணமாக அணியில் இருந்து விலகுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. அவருக்கு பதிலாக ஆல் ரவுண்டர் மைக்கேல் நெசர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.