முகப்பு /செய்தி /விளையாட்டு / உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் அக்டோபர் 5-இல் தொடங்கும் என தகவல்

உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் அக்டோபர் 5-இல் தொடங்கும் என தகவல்

உலகக்கோப்பை கிரிக்கெட்

உலகக்கோப்பை கிரிக்கெட்

பாகிஸ்தான் வீரர்களுக்கான விசா வழங்குதல், வரி சலுகைகள் உள்ளிட்ட விவகாரங்கள் காரணமாக மத்திய அரசின் முடிவை ஐசிசி எதிர்பார்த்துள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் அக்டோபர் மாதம் 5 ஆம் தேதி தொடங்க அதிக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை பிசிசிஐ விரைவில் வெளியிடவுள்ளது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) போட்டிக்காக சுமார் 12 இடங்களை பட்டியலிட்டுள்ளதாகவும், இறுதிப் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறும் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

அகமதாபாத் மைதானத்தை தவிர்த்து பெங்களூரு, சென்னை, டெல்லி, தர்மசாலா, கவுகாத்தி, ஹைதராபாத், கொல்கத்தா, லக்னோ, இந்தூர், ராஜ்கோட் மற்றும் மும்பை ஆகிய மைதானங்களில் உலகக்கோப்பை தொடரை நடத்த திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.  உலகக்கோப்பை தொடர் 46 நாட்கள் நடைபெறும் என்றும், மொத்தம் 48 ஆட்டங்களைக் கொண்டதாக அட்டவணை தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மொத்தம் 10 அணிகள் உலகக்கோப்பை தொடரில் மோதவுள்ளன.

top videos

    இதேபோன்று வார்ம் அப் மேட்ச்சுகளுக்காக மேலும் சில மைதானங்கள் தேர்வு செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொதுவாக உலகக்கோப்பை தொடருக்கான போட்டிகளை ஓராண்டுக்கு முன்னரே அறிவிப்பு செய்வதை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வழக்கமாக கொண்டிருக்கிறது. ஆனால் போட்டி இந்தியாவில் நடைபெறவுள்ளதால் பாகிஸ்தான் வீரர்களுக்கான விசா வழங்குதல், வரி சலுகைகள் உள்ளிட்ட விவகாரங்கள் காரணமாக மத்திய அரசின் முடிவை ஐசிசி எதிர்பார்த்துள்ளது. பாகிஸ்தான் வீரர்கள் இந்தியாவில் விளையாடுவதற்கு கடந்த 2013 ஆம் ஆண்டில் இருந்து விசா மறுக்கப்பட்டு வருகிறது. அவர்களுக்கு இந்த உலகக்கோப்பை தொடரில் விளையாடுவதற்கு விசாவை மத்திய அரசு வழங்கும் என்று பிசிசிஐ கூறியுள்ளது.

    First published:

    Tags: Cricket