முகப்பு /செய்தி /விளையாட்டு / உலகக்கோப்பை தொடரில் இடம்பெறும் கேன் வில்லியம்சன்… புதிய பொறுப்பை அளித்த அணி நிர்வாகம்

உலகக்கோப்பை தொடரில் இடம்பெறும் கேன் வில்லியம்சன்… புதிய பொறுப்பை அளித்த அணி நிர்வாகம்

கேன் வில்லியம்சன்

கேன் வில்லியம்சன்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான அறிமுகப் போட்டியில் வில்லியம்சனுக்கு காயம் ஏற்பட்டது

  • Last Updated :
  • Tamil Nadu, India

காயம் காரணமாக ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இருந்து விலகியுள்ள நியூசிலாந்து அணியின் கேன் வில்லியம்சன் இந்தியாவில் நடைபெறவுள்ள உலகக்கோப்பை தொடரில் இடம்பெறுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறை வில்லியம்சனுக்கு புதிய பொறுப்பை நியூசிலாந்து கிரிக்கெட் நிர்வாகம் அளித்துள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கேன் வில்லியம்சன் குஜராத் டைட்டன்ஸ் அணியில் இடம்பெற்றிருந்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான அறிமுகப் போட்டியில் வில்லியம்சனுக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் ஐபிஎல் தொடரிலிருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டது.

தற்போது கேன் வில்லியம்சன் நியூசிலாந்தில் காயத்திற்காக சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கிடையே வரும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெறவுள்ளது. இந்த தொடரில் வில்லியம்சன் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் நியூசிலாந்து அணியின் ஆலோசகராக (Mentor) செயல்படுவார் என்று நியூசிலாந்து கிரிக்கெட் நிர்வாகம் அறிவித்துள்ளது.

top videos

    இது தொடர்பாக நியூசிலாந்து அணியின் பயிற்சியாளர் கேரி ஸ்டெட் அளித்துள்ள பேட்டியில், ‘கிரிக்கெட்டில் மிகவும் அனுபவம் மிக்க வீரராக வில்லியம்சன் இருக்கிறார். அவரது அனுபவத்தை நியூசிலாந்து அணி சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அறுவை சிகிச்சைக்கு பின்னர் கேன் வில்லியம்சன் தற்போது குணம் அடைந்து வருகிறார். துரதிருஷ்டவசமாக அவரால் விளையாட முடியாது சூழல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் அவரை அணி இழக்காது’ என்று கூறியுள்ளார்.

    First published:

    Tags: Cricket, Kane Williamson