முகப்பு /செய்தி /விளையாட்டு / 3 ஆண்டுகளுக்கு முன்பே அஃப்ரிடி கொடுத்த அறிவுரை.. தொடர்ந்து சம்பவங்களில் சிக்கும் நவீன் உல் ஹக்

3 ஆண்டுகளுக்கு முன்பே அஃப்ரிடி கொடுத்த அறிவுரை.. தொடர்ந்து சம்பவங்களில் சிக்கும் நவீன் உல் ஹக்

விராட் கோலி - நவீன் உல் ஹக் சண்டை

விராட் கோலி - நவீன் உல் ஹக் சண்டை

விளையாட்டை மட்டும் விளையாடுங்கள், வசை பேச்சுக்களில் ஈடுபட வேண்டாம் என 3 ஆண்டுகளுக்கு முன்பே நவீன் உல் ஹக்கிற்கு அப்ரிடி அறிவுரை கூறியிருந்தார்.

  • Last Updated :
  • Delhi, India

2023 ஐபிஎல் தொடரில் இந்தியாவின் முன்னணி கிரிக்கெட் நட்சத்திரங்களான விராட் கோலியும், கவுதம் கம்பீரும் மைதானத்திலேயே மோதிக்கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மே 1ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் லக்னோ அணி பெங்களூரு அணியை எதிர்கொண்டது.

இந்த போட்டியில் லக்னோ அணியின் வீரர் நவீன் உல் ஹக் மற்றும் பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி இடையே வெடித்த மோதல் கோலி கம்பீர் இடையேயான மோதலாக உருவெடுத்தது. போட்டியின் போது நவீன் மற்றும் கோலி இடையே மோதல் ஏற்பட்டு ஷூவில் இருந்த தூசியை வீசி நவீனைப் பார்த்து கோலி சில வார்த்தைகளைக் கூறினார்.

தொடர்ந்து ஆட்டம் முடிந்த பின்னர் நவீனிடம் விராட் கோலி ஏதோ சில வார்த்தைகளை சொல்ல, நவீன் கோலியின் கையை பிடித்து முறுக்குவது போன்ற வீடியோக்கள் இணையத்தில் வைராலனது. போட்டிக்குப் பின்னர் தான் விராட் கோலி மற்றும் கம்பீர் இடையே கடும் வாக்குவாதம், மோதல் ஏற்பட்டது.

இந்த சம்பவம் வரை வெளியே தெரிந்திராத இளம் வீரரான நவீன் உல் ஹக் தற்போது உலக அரங்கில் கவனம் பெற்றுள்ளது. ஆப்கானைச் சேர்ந்த 23 வயது இளம் வீரரான இவர் ஏற்கனவே இது போன்ற மோதல் சம்பவத்திற்கு பெயர் போனவர். 2020 இலங்கையில் நடைபெற்ற லங்கா ப்ரீமியர் லீக் போட்டியில் இதே போன்ற மோதல் சர்ச்சையில் நவீன் சிக்கியுள்ளார். கன்டி டஸ்கர்ஸ் அணிக்காக விளையாடும் போது இவர் பாகிஸ்தான் வீரர்களாகிய முகமது ஆமீர் மற்றும் ஷஹித் அப்ரிடி ஆகியோருட ன் இது போன்ற மோதலில் ஈடுபட்டுள்ளார். பின்னர், சக வீரரான முனாப் படேல் உள்ளிட்டோர் தலையிட்டு சமரசம் செய்து வைத்தனர்.

அதேபோல், 2021 லங்கா ப்ரீமியர் லீக் தொடரிலும், நவீன் உல் ஹக், திசேரா பெரேராவுடன் மோதிய சம்பவத்தின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இது மட்டுமல்ல, சமீபத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவின் பிக் பாஷ் டி20 தொடரில் சிட்னி சிக்ஸ்சர்ஸ் அணிக்காக விளையாடிய நவீன் எதிரணி வீரர் D’Arcy Short உடன் மோதலில் ஈடுபட்டார். எனவே, நடப்பு ஐபிஎல் தொடரில் இவர் செய்த சம்பவம் இவரை பற்றி அறிந்தவர்களுக்கு ஆச்சரியம் தரவில்லை.

இந்நிலையில், 2020 ஆண்டிலேயே இளம் வீரர் நவீன் உல் ஹக்கிற்கு முன்னாள் பாகிஸ்தான் வீரர் ஷஹித் அப்ரிடி ட்விட்டரில் அறிவுரை ஒன்றை கூறியுள்ளார். அதில் அவர், "இளம் வீரருக்கு நான் கூற விரும்பும் அறிவுரை எளிமையானது. விளையாட்டை மட்டும் விளையாடுங்கள், வசை பேச்சுக்களில் ஈடுபட வேண்டாம்.

top videos

    எனக்கு பாசமான உறவுடன் ஆப்கானிஸ்தானில் நல்ல நண்பர்கள் உள்ளார். எனவே, சக வீரர்களுக்கும் எதிர் அணி வீரர்களுக்கும் மரியாதை தருவதே விளையாட்டின் அடிப்படை விதி" என ஷாஹித் அப்ரிடி கூறியிருந்தார். ஆனால், ஆண்டுகள் கடந்தும் நவீன் சண்டைகளில் சிக்குவது மட்டும் ஓய்ந்த பாடில்லை.

    First published:

    Tags: IPL 2023, Shahid Afridi, Virat Kohli