முகப்பு /செய்தி /விளையாட்டு / SA vs WI T20 : தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற 259 ரன்கள் இலக்கு

SA vs WI T20 : தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற 259 ரன்கள் இலக்கு

வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜான்சன் சார்லஸ்

வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜான்சன் சார்லஸ்

மேயர்ஸ் 51 ரன்னில் வெளியேற 46 பந்துகளில் 11 சிக்சர் 10 பவுண்டரியுடன் சார்லஸ் 118 ரன்கள் குவித்தார். இருவரும் 2 ஆவது விக்கெட்டிற்கு 135 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் 2ஆவது டி20 கிரிக்கெட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற 259 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. தற்போது இரு அணிகளுக்கு இடையே 3 போட்டிகளைக் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றுள்ள நிலையில் 2 ஆவது போட்டி சூப்பர் ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் தற்போது நடைபெற்று வருகிறது.

இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி கேப்டன் எய்டன் மார்க்ரம் பவுலிங்கை முதலில் தேர்வு செய்தார். இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங்கை தொடங்கியது. தொடக்க வீரர் பிரெண்டன் கிங் 1 ரன்னில் வெளியேறி அதிர்ச்சி கொடுத்தார். அடுத்து இணைந்த கைல் மேயர்ஸ் – ஜான்சன் சார்லஸ் இணை தென்னாப்பிரிக்காவின் பந்துவீச்சை சிதறடித்து. ஒவ்வொரு ஓவரிலும் பவுண்டரிகள் பறந்ததால் ரன் ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது. மேயர்ஸ் 51 ரன்னில் வெளியேற 46 பந்துகளில் 11 சிக்சர் 10 பவுண்டரியுடன் சார்லஸ் 118 ரன்கள் குவித்தார். இருவரும் 2 ஆவது விக்கெட்டிற்கு 135 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

அடுத்து வந்த கேப்டன் பவெல் 28 ரன்களும், ரொமாரியோ ஷெபர்ட் 41 ரன்களும் எடுத்தனர். 20ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்த வெஸ்ட் இண்டீஸ் அணி 258 ரன்கள் குவித்தது. இதையடுத்து 259 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை நோக்கி தென்னாப்பிரிக்க அணி வீரர்கள் விளையாடி வருகின்றனர்.

First published:

Tags: Cricket