முகப்பு /செய்தி /விளையாட்டு / யு.ஏ.இ. அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி…

யு.ஏ.இ. அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி…

சதம் அடித்த பிராண்டன் கிங்

சதம் அடித்த பிராண்டன் கிங்

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஐக்கிய அரபு அமீரக (யு.ஏ.இ)அணிக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி ஐக்கிய அரபு அமீரகத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற யு.ஏ.இ அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

தொடக்க வீரராக களம் இறங்கிய கேப்டன் முகமது வசீம் ரன் ஏதும் எடுக்காமலும், மற்றொரு வீரர் ஆர்யான்ஷ் சர்மா 5 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த அரவிந்த் 40 ரன்னும், ரமீஸ் ஷெசாத் 16 ரன்னும் ஆசிப் கான் 27 ரன்னும் எடுத்து வெளியேறினர். அதிரடியாக விளையாடிய அல் நசீர் 58 ரன்கள் சேர்த்தார். 47.1 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த யு.ஏ.இ. அணி 202 ரன்கள் எடுத்தது.

வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் கீமோ பவுல் 3 விக்கெட்டுகளையும், டொமினிக் டிரேக்ஸ், ஒடியான் ஸ்மித், கேனா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதையடுத்து 203ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் தொடக்க வீரர் பிராண்டன் கிங் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். 112 பந்துகளை எதிர்கொண்ட அவர் 4 சிக்சர் மற்றும் 12 பவுண்டரியுடன் 112 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஜான்சன் சார்லஸ் 24 ரன்னும், ஷமார் ப்ரூக்ஸ் 44 ரன்களும் எடுக்க 35.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்த வெஸ்ட் இண்டீஸ் அணி 206 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இதையும் படிங்க - ஃப்ரெஞ்ச் ஓபன் டென்னிஸ் : காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார் ஜோகோவிச்… நடாலின் சாதனை முறியடிப்பு

இந்த  வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

First published:

Tags: Cricket