முகப்பு /செய்தி /விளையாட்டு / வில்லியம்சன், ஹென்றி நிகோல்ஸ் இரட்டை சதம்… வெலிங்டன் டெஸ்டில் ஆதிக்கம் செலுத்தும் நியூசிலாந்து…

வில்லியம்சன், ஹென்றி நிகோல்ஸ் இரட்டை சதம்… வெலிங்டன் டெஸ்டில் ஆதிக்கம் செலுத்தும் நியூசிலாந்து…

ஹென்றி நிகோல்ஸ் - கேன் வில்லியம்சன்

ஹென்றி நிகோல்ஸ் - கேன் வில்லியம்சன்

கேன் வில்லியம்சன் 296 பந்துகளை எதிர்கொண்டு 215 ரன்கள் குவித்தார். மற்றொரு ஆட்டக்காரர் ஹென்றி நிக்கோல்ஸ் 240 பந்துகளில் 200 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

வெலிங்டனில் நடைபெற்று வரும் இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், நியூசிலாந்து அணியின் கேன் வில்லியம்சன் மற்றும் ஹென்றி நிக்கோல்ஸ் ஆகியோர் இரட்டைச் சதம் விளாசியுள்ளனர். இந்த போட்டியில் 2-ஆவது நாள் ஆட்டம் இன்று முடிவுக்கு வந்துள்ள நிலையில், நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 580 ரன்களை குவித்து வலுவான நிலையில் உள்ளது. இலங்கை கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடிய வருகிறது.

முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் திரில்லிங்கான வெற்றியை பெற்றது. இந்த வெற்றியின் மூலமாக நியூசிலாந்து அணி இலங்கை அணியை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இருந்து வெளியேற்றியது. இந்நிலையில் இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வெலிங்டனில் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நியூஸிலாந்து அணியின் கேன் வில்லியம்சன் 296 பந்துகளை எதிர்கொண்டு 215 ரன்கள் குவித்தார். மற்றொரு ஆட்டக்காரர் ஹென்றி நிக்கோல்ஸ் 240 பந்துகளில் 200 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தார். 123 ஓவர்கள் முடிந்த நிலையில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளை  மட்டுமே இழந்து 580 ரன்களை குவித்து டிக்ளேர் செய்துள்ளது.

இதையடுத்து இலங்கை அணி தனது முதல் இன்னிசை தொடங்கியது. தொடக்க வீரர் ஒஷாடா பெர்னான்டோ 6 ரன்னிலும், அவருக்கு பின் வந்த குசால் மெண்டிஸ் ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டம் இழந்து வெளியேறினர். 17 ஓவர்கள் முடிந்த நிலையில் இலங்கை அணி 2 விக்கெட்டுகளை இழந்து 26 ரன்களை எடுத்துள்ளது. இதனுடன் இன்றைய 2 ஆம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்துள்ளது. கேப்டன் திமுத் கருணாரத்னே 16 ரன்னிலும், பிரபாத் ஜெயசூர்யா 4 ரன்கள் எடுத்தும் களத்தில் உள்ளனர். நாளை மூன்றாம் நாள் ஆட்டம் தொடங்க உள்ளது.

First published:

Tags: Cricket