ட்விட்டரின் புதிய கொள்கையைத் தொடர்ந்து, கோலி, தோனி, ரோஹித் சர்மா உள்ளிட்ட கிரிக்கெட் பிரபலங்கள் தங்களது ப்ளூ டிக்கை இழந்துள்ளனர். ட்விட்டர் நிறுவனத்தை உலகின் நம்பர் ஒன் பணக்காரரான எலான் மஸ்க் வாங்கியதைத் தொடர்ந்து பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதில் ட்விட்டர் சப்ஸ்க்ரிப்ஷன் முக்கியமாக கருதப்படுகிறது. இதன்படி உறுதி செய்யப்பட்ட ப்ளூ டிக்கை பெறுவதற்கு பயனாளிகள் சந்தா செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளார்கள். இதற்கிடையே பிரபலங்களுக்கு வழங்கப்பட்டு வந்த லெகெஸி (Legacy) ப்ளூ டிக் நீடிக்கப்பட்டு வந்தது.
லெகெஸி ப்ளு டிக் அடிப்படையில் இந்திய அணியின் கிரிக்கெட் வீரர்கள், திரைத்துறையினர் உள்ளிட்டோர் இந்த ப்ளு டிக்கை பெற்றிருந்தார்கள். இந்நிலையில், அனைவரும் இனி ப்ளூ டிக்கை சந்தா செலுத்தி பெற வேண்டும் என்று எலான் மஸ்க் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டார். இதற்கு 20 ஆம் தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்று நள்ளிரவு முதல் இந்த லெகெஸி ப்ளு டிக்குகள், பிரபலங்களின் கணக்குகளில் இருந்து பறிக்கப்பட்டு விட்டன. இதன் அடிப்படையில் இந்திய அணியின் விராட் கோலி, முன்னாள் கேப்டன் தோனி, ரோஹித் சர்மா உள்ளிட்டோரின் ட்விட்டர் கணக்கிலிருந்து ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளது.
ட்விட்டரில் ப்ளூ டிக்கை பெற வேண்டும் என்றால் பயனாளர்கள் அதற்காக சந்தா செலத்த வலியுறுத்தப்பட்டுள்ளனர். பயனாளிகள் ஆண்ட்ராய்டு மற்றும் ஐ ஃபோனை பயன்படுத்துபவர்களாக இருந்தால் மாதம்தோறும் சுமார் ரூ. 900-ம், டெக்ஸ்டாப்பில் கணினி மூலம் பயன்படுத்துபவராக இருந்தால் மாதம்தோறும் சுமார் ரூ. 650-ம் செலுத்த வேண்டியிருக்கும். பயனாளிகள் ஆண்டு கட்டணமாக ரூ. 6,800 செலுத்தி இந்த சேவையை பெறலாம் என ட்விட்டர் அறிவித்துள்ளது. ட்விட்டரில் பதிவிடும்போது சாதாரண அக்கவுண்டுகளுக்கு அதிகபட்சமாக 280 எழுத்துக்கள் வழங்கப்படும்போது, ப்ளூ டிக் உடையவர்களுக்கு 4,000 எழுத்துக்கள் வரை வழங்கப்படுகிறது. இதேபோன்று, 60 நிமிடங்கள் ஓடக்கூடிய வீடியோக்கள் அதிகபட்சாக 2 ஜிபி வரையில் ப்ளூ டிக் பயனாளிகள் ட்விட்டரில் பதிவிட முடியும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: MS Dhoni, Rohit Sharma, Twitter, Virat Kohli