கர்நாடகாவில் பொதுமக்கள் அதிக எண்ணிக்கையில் வரும் எளிமையான உணவகம் ஒன்றுக்கு கிரிக்கெட் வீரர் விராட் கோலி மற்றும் அவரது மனைவி அனுஷ்கா சர்மா ஆகியோர் சென்று உணவக பணியாளர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்தனர்.
இது தொடர்பான புகைப்படங்கள் இன்டாகிராமில் வைரலாகியுள்ளது. கர்நாடகாவின் மல்லேஸ்வரத்தில்தான் சென்ட்ரல் டிபன் ரூம் எனப்படும் சி.டி.ஆர். உணவகம் அமைந்துள்ளது. இங்கு சென்ற விராட் கோலி, அனுஷ்கா சர்மா சூடான சுவையான மசாலா தோசையை சாப்பிட்டு மகிழ்ந்துள்ளனர்.
மசாலா தோசையுடன் சட்னி இருக்கும் புகைப்படத்தை அனுஷ்கா சர்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இன்னொரு புகைப்படத்தில் கேசரி இடம்பெற்றுள்ளது. சி.டி.ஆர் உணவத்திற்கு சென்றுள்ள விராட் கோலியும் அனுஷ்கா சர்மாவும் பஜ்ஜி உள்ளிட்ட பதார்த்தங்களையும் சுவை பார்த்துள்ளனர்.
இந்த விஐபி வாடிக்கையாளர்களை பார்த்த உணவகத்தின் பணியாளர்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர். அவர்களுடன் இணைந்து பணியாளர்கள் செல்ஃபியும், புகைப்படங்களும் எடுத்துக் கொண்டனர்.
அனுஷ்கா, விராட் கோலி சாப்பிட்ட மசாலா தோசையின் விலை ரூ. 70, கேசரியின் விலை ரூ. 40 என்று உணவகத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் தற்காலிக கேப்டனாக விராட் கோலி நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தலைமையிலான பெங்களூரு அணி கடந்த 2 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cricket