ஐபிஎல் ப்ளே-ஆப் சுற்றுக்கான போட்டி சூடுபிடித்துள்ள நிலையில், இன்று டெல்லி அணியுடன் சென்னை அணி பலப்பரீட்சை நடத்துகிறது.
13 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி, 15 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது. மும்பை, பெங்களூரு, லக்னோ உள்ளிட்ட அணிகளும் பிளே-ஆப் வாய்ப்பில் நீடிப்பதால் சென்னை அணி இந்தப் போட்டியில் வெற்றி பெறவேண்டியது கட்டாயத்தில் உள்ளது.
வெற்றிபெறும் பட்சத்தில், 2-வது இடத்தை உறுதிசெய்யவும் வாய்ப்பு உருவாகியுள்ளது. ஒருவேளை தோல்வி அடைந்தால், மற்ற போட்டிகளின் முடிவுகளைப் பொறுத்தே சென்னை அணியின் தலைவிதி தீர்மானிக்கப்படும்.
டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் பிற்பகல் 3.30 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது. இதேபோன்று, இரவு 7.30 மணிக்கு கொல்கத்தாவில் நடைபெறும் மற்றொரு போட்டியில் லக்னோ அணி கொல்கத்தாவை எதிர்கொள்கிறது.
சென்னை அணியைப் போன்றே, 15 புள்ளிகளைப் பெற்றுள்ள லக்னோ அணி, இந்தப் போட்டியில் வெற்றி பெற்று பிளேஆப் சுற்று வாய்ப்பை உறுதிப்படுத்தும் முனைப்பில் உள்ளது. சென்னை, லக்னோ அணிகள் ப்ளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறுமா என்பதை இன்றைய நாள் தீர்மானிக்கும் என்பதால், இந்த இரு போட்டிகளும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.