முகப்பு /செய்தி /விளையாட்டு / ‘விராட் கோலிக்கு அடுத்து இந்திய அணியில் இவர்தான் சிறந்த பேட்ஸ்மேன்’ – இளம் வீரருக்கு குவியும் பாராட்டு

‘விராட் கோலிக்கு அடுத்து இந்திய அணியில் இவர்தான் சிறந்த பேட்ஸ்மேன்’ – இளம் வீரருக்கு குவியும் பாராட்டு

விராட் கோலி

விராட் கோலி

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர், உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் உள்ளிட்டவற்றில் விராட் கோலியின் பங்களிப்பு அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

  • Last Updated :
  • Tamil Nadu, India

விராட் கோலிக்கு அடுத்ததாக இந்திய அணியின் சிறந்த பேட்ஸ்மேன் என்ற பாராட்டு இளம் வீரர் ஒருவருக்கு கிடைத்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணியில் கடந்த 2008 ஆம் ஆண்டிலிருந்து விளையாடி வரும் விராட் கோலி அணிக்காக பல சாதனைகளை ஏற்படுத்தியுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் 8,416 ரன்கள், ஒருநாள் போட்டிகளில் 12,898 ரன்கள் மற்றும் சர்வதேச டி20 போட்டிகளில் 4,008 ரன்களை விராட் கோலி குவித்துள்ளார். 34 வயதாகும் விராட் கோலி இப்போதும் நல்ல ஃபார்மில் இருப்பதுடன் ஐபிஎல் போட்டிகளிலும் கலக்கி வருகிறார்.

இந்திய அணி அடுத்து விளையாடவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர், உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் உள்ளிட்டவற்றில் விராட் கோலியின் பங்களிப்பு அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், இந்திய அணியில் விராட் கோலிக்கு அடுத்தபடியாக சுப்மன் கில்தான் சிறந்த வீரர் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ரமிஸ் ராஜா கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது-  சுப்மன் கில்லுக்கு அதிக திறமைகள் உள்ளன. அவர் இன்னும் நீண்ட காலத்திற்கு விளையாடுவார். அவரது ஆட்டம் உலகின் மிகச்சிறந்த வீரர்களின் ஆட்டதைப் போன்று உள்ளது. அவர் ரன் குவிக்காவிட்டாலும், ஒவ்வொரு பந்தையும் அவர் எதிர்கொள்ளும் விதம் அற்புதமாக இக்கிறது. விராட் கோலிக்கு அடுத்தபடியாக இந்திய அணியின் சிறந்த பேட்ஸ்மேனாக அவர் இருப்பார் என்று பலரும் அவரை கணித்துள்ளனர்.

top videos

    அவர்களைப் போன்றுதான் நானும் கூறுகிறேன்.  சுப்மன் கில் விளையாட்டில் ரோஹித் சர்மாவின் சாயலும் இருக்கிறது. இது அவரது ஆட்டத்திற்கு மேலும் சிறப்பு சேர்க்கிறது. டி20, ஒருநாள் போட்டிகள் மற்றும் டெஸ்ட் என அனைத்து ஃபார்மேட்டிலும் சுப்மன் கில் தனது திறமையை நிரூபித்துள்ளார். இந்த இளம் வயதிலேயே அவர் மிக முக்கியமான சாதனைகளை ஏற்படுத்தியிருக்கிறார். அவருக்கு வானம் தான் எல்லையாக இருக்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். தற்போது வரை ஒருநாள் போட்டிகளில் 4 சதமும், டெஸ்ட் போட்டிகளில் 2 சதமும், டி20யில் ஒரு சதமும் சுப்மன் கில் அடித்துள்ளார்.

    First published:

    Tags: Cricket