முகப்பு /செய்தி /விளையாட்டு / T20 Cricket : இலங்கை அணிக்கு எதிரான 2 ஆவது டி20… 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது நியூசிலாந்து அணி

T20 Cricket : இலங்கை அணிக்கு எதிரான 2 ஆவது டி20… 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது நியூசிலாந்து அணி

நியூசிலாந்து கிரிக்கெட் அணி

நியூசிலாந்து கிரிக்கெட் அணி

3 போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் தலா 1-1 போட்டியில் வெற்றி பெற்று சமநிலையில் உள்ளன. கடைசி டி20 போட்டி சனிக்கிழமை நடைபெறவுள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

இலங்கை அணிக்கு எதிரான 2 ஆவது டி20 கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இலங்கை கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி சூப்பர் ஓவரில் வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. இதையடுத்து 2 ஆவது டி20 கிரிக்கெட் போட்டி டியூன்டின் நகரில் இன்று நடைபெற்றது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை முதலில் தேர்வு செய்தது. இதையடுத்து இலங்கை அணியின் தொடக்க வீரர்களாக பதும் நிசாங்கா, குசால் மென்டிஸ் ஆகியோர் களத்தில் இறங்கினர். நிசாங்கா 9 ரன்னும், மெண்டிஸ் 10 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்க அடுத்து இணைந்த குசால் பெரோ – தனஞ்செய டி சில்வா இணை பொறுப்புடன் விளையாடி ரன்களை சேர்த்தது. இருவரும் 3 ஆவது விக்கெட்டிற்கு 62 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.  பெரோ 35 ரன்னும் சில்வா 37 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

பின்னர் களமிறங்கயி அசலங்கா 24 ரன்கள் எடுக்க மற்றவர்கள் ஒற்றை இலக்கத்தில் வெளியேறினர். 19 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இலங்கை அணி 141 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து 142 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய நியூசிலாந்து அணி 14.4 ஓவரிலேயே வெற்றி இலக்கை எட்டியது. தொடக்க வீரர் சாட் போவ்ஸ்  15 பந்தில் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் இணைந்த டிம் செய்பர்ட் – கேப்டன் டாம் லாம் இணை பொறுப்புடன் விளையாடி அணியை வெற்றி பெற வைத்தது. டிம் செய்பர்ட் 79 ரன்னும், டாம் லாதம் 20 ரன்னும் எடுத்தனர். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் தலா 1-1 போட்டியில் வெற்றி பெற்று சமநிலையில் உள்ளன. கடைசி டி20 போட்டி சனிக்கிழமை நடைபெறவுள்ளது.

First published:

Tags: Cricket