முகப்பு /செய்தி /விளையாட்டு / T20 Cricket : அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் 22 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணி வெற்றி

T20 Cricket : அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் 22 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணி வெற்றி

வங்கதேச கிரிக்கெட் அணி

வங்கதேச கிரிக்கெட் அணி

அயர்லாந்து அணியின் தொடக்க வீரர்கள் பால் ஸ்டிர்லிங் – ரோஸ் அடைர் இணை முதல் விக்கெட்டிற்கு 32 ரன்கள் சேர்த்து நம்பிக்கை அளித்தனர்

  • Last Updated :
  • Tamil Nadu, India

அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. அயர்லாந்து கிரிக்கெட் அணி வங்கதேசத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி சட்டோக்ரம் நகரில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து வங்கதேச அணியின் தொடக்க வீரர்களாக லிட்டன் தாஸ் மற்றும் ரோனி தலுக்தர் களத்தில் இறங்கினர். இருவரும் அதிரடியாக விளையாடியதால் ரன் எண்ணிக்கை ராக்கெட் வேகத்தில் உயந்தது.

7.1 ஆவது ஓவரில் அணி 91 ரன்கள் இருந்தபோது 47 ரன்கள் எடுத்திருந்த லிட்டன் தாஸ் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்து வந்த ஷாண்டோ 14 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சிறப்பாக விளையாடிய ரோனி அரைச்சத்தை கடந்து 38 பந்துகளில் 67 ரன்கள் எடுத்து வெளியேறினார். ஷமிம் உசைன் 30ரன்கள், தவ்ஹீத் இருதாய் 13 ரன்கள், கேப்டன் ஷகிப் அல் ஹசன் 20 ரன்கள் சேர்க்க 19.2 ஓவரில் 207 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைபட்டது. இதையடுத்து, 8 ஓவர்களில் 103 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற  இலக்கு அயர்லாந்து அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது.

top videos

    அயர்லாந்து அணியின் தொடக்க வீரர்கள் பால் ஸ்டிர்லிங் – ரோஸ் அடைர் இணை முதல் விக்கெட்டிற்கு 32 ரன்கள் சேர்த்து நம்பிக்கை அளித்தனர். பால் ஸ்டிர்லிங் 17 ரன்னும், ரோஸ் அடைர் 13 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்க அடுத்து வந்த லோர்கன் டக்கர் 1 ரன்னில் வெளியேறினார். மற்றவர்களில் ஹேரி டெக்டார் 19 ரன்னும், கரேத் டெலானி 21 ரன்னும் எடுத்தனர். 8 ஓவர்கள் முடிவில் அயர்லாந்து அணியால் 81 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் 22 ரன்கள் வித்தியாசத்தில் டர்வொர்த் லீவிஸ் முறையில் வங்கதேச அணி வெற்றி பெற்றுள்ளது.

    First published:

    Tags: Cricket, T20