டி20 போட்டிகள் உலகம் முழுவதும் ரசிகர்களின் பேராதரவை பெற்றுள்ள நிலையில் 10 ஓவர் போட்டிகளை ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியம் அறிமுகப்படுத்தவுள்ளது. கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளாக டி20 போட்டிகள் மீதான ரசிகர்களின் ஆர்வம் அதிகரித்துள்ளது. இதனால் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகள் களையிழந்திருப்பதாக விமர்சனங்கள் எழுந்தன. இதற்கிடையே, இந்தியா – ஆஸ்திரேலியா இடையே நடைபெற்ற டெஸ்ட் போட்டிகள் விறுவிறுப்பை ஏற்படுத்தி இருந்தன.
இதற்கிடையே 10 ஓவர் போட்டிகள் துபாய் உள்ளிட்ட நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டு மிகுந்த வரவேற்பை பெற்றன. இந்த நிலையில் 10 ஓவர் போட்டிகளை ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியம் அறிமுகம் செய்யவுள்ளது. ஜிம் ஆஃப்ரோ டி10 (Zim Afro T10) என்ற பெயரில் இந்த கிரிக்கெட் தொடர் நடைபெறவுள்ளது. ஆகஸ்ட் மாதம் தொடங்கவுள்ள இந்த தொடரில் 6 அணிகள் பங்கேற்கவுள்ளன.
போட்டித் தொடரில் இடம்பெறும் அணிகள், வீரர்கள் ஏலம் உள்ளிட்ட விபரங்களை விரைவில் வெளியிடப்படவுள்ளன. முன்னதாக ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இலங்கையில் 10 ஓவர் ரிக்கெட் தொடர் நடத்தப்பட்டது. இதனை டி 10 குளோபல் ஸ்போர்ட்ஸ் என்ற நிறுவனம் நடத்தியது. இதே நிறுவனம்தான் ஜிம்பாப்வேயில் 10 ஓவர் போட்டிகளை நடத்துவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் முகுலானி கூறியதாவது- டி10 கிரிக்கெட் போட்டிகளை மிகுந்த உற்சாகத்துடன் அறிமுகம் செய்கிறோம். இந்த போட்டிகள் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை. வர்த்தக ரீதியில் இந்த கிரிக்கெட் தொடரில் சர்வதேச நிறுவனங்கள் இணையவுள்ளன. அடுத்த தலைமுறையினரின் திறமைக்கு ஏராளமான வாய்ப்புகளை அளிக்கும் வகையில் இந்த கிரிக்கெட் தொடர் நடைபெறும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cricket