முகப்பு /செய்தி /விளையாட்டு / டி20 பேட்டிங் தரவரிசை... தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கும் சூர்யகுமார் யாதவ்..!

டி20 பேட்டிங் தரவரிசை... தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கும் சூர்யகுமார் யாதவ்..!

சூர்யகுமார் யாதவ்

சூர்யகுமார் யாதவ்

பாகிஸ்தானைச் சேர்ந்த முகமது ரிஸ்வான் 811 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும், பாபர் அசாம் 755 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.

  • Last Updated :
  • Delhi, India

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி, கிரிக்கெட் போட்டிகளில் சிறந்து விளங்கும் வீரர் மற்றும் வீராங்கனைகளின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. இதன்படி, டி20 பேட்டிங் தரவரிசையில், இந்திய கிரிக்கெட் வீரர் சூர்யகுமார் யாதவ், 906 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார்.

பாகிஸ்தானைச் சேர்ந்த முகமது ரிஸ்வான் 811 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும், மற்றொரு பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் 755 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளனர். இந்த வரிசையில் விராட் கோலி ஒரு இடம் சறுக்கி 15-வது இடத்தில் உள்ளார்.

டி20 பந்துவீச்சில் முதல் பத்து இடங்களில் இந்தியர்கள் ஒருவரும் இல்லை. இந்திய அணி சார்பில் அர்ஷ்தீப் சிங் 14ஆவது இடத்திலும், புவனேஷ்வர் குமார் 18ஆவது இடத்திலும் உள்ளனர்.

சிறந்த ஆல்ரவுண்டர்களுக்கான தரவரிசையில், ஆடவர் பிரிவில் வங்கதேசத்தைச் சேர்ந்த அதிரடி ஆட்டக்காரர் ஷகீத் அல் ஹாசன் முதலிடத்திலும், இந்திய அணி வீரர் ஹர்திக் பாண்டியா இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.

top videos
    First published:

    Tags: BCCI, Hardik Pandya, ICC Ranking, Suryakumar yadav, Virat Kohli