முகப்பு /செய்தி /விளையாட்டு / ‘ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் தொடரக்கூடாது’ – ஷேன் வாட்சன்

‘ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் தொடரக்கூடாது’ – ஷேன் வாட்சன்

ஸ்டீவ் ஸ்மித் - ஷேன் வாட்சன்

ஸ்டீவ் ஸ்மித் - ஷேன் வாட்சன்

2018-ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் ஆஸ்திரேலிய அணி சுற்றுப் பயணம் மேற்கொண்டது. அப்போது பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஸ்மித் சிக்கி அவப் பெயரை ஏற்படுத்திக் கொண்டார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஆஸ்திரேலிய அணியின் தற்காலிக கேப்டனாக செயல்பட்டு வரும் ஸ்டீவ் ஸ்மித் அந்த பொறுப்பில் தொடரக் கூடாது என்று முன்னாள் ஆல் ரவுண்டர் ஷேன் வாட்சன் விருப்பம் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக வேகப்பந்து வீச்சாளர் பாட் கம்மின்ஸ் செயல்பட்டு வருகிறார். சமீபத்தில் அவரது தாயாருக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து அவர் ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்டு சென்றார். இதனால் அவரால் இந்தியாவுக்கு எதிரான 3 மற்றும் 4 ஆவது டெஸ்ட் போட்டிகளில் விளையாட முடியவில்லை.

இதையடுத்து ஸ்டீவ் ஸ்மித்திற்கு கேப்டன் பொறுப்பு அளிக்கப்பட்டது. அவர் கேப்டனாக செயல்பட்ட 3 ஆவது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்ற நிலையில் 4 ஆவது போட்டியை டிரா செய்தது. இதன் தொடர்ச்சியாக ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கும் ஸ்மித் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் கேப்டன் பொறுப்பில் ஸ்மித் தொடரக் கூடாது என்று முன்னாள் ஆல் ரவுண்டர் ஷேன் வாட்சன் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது-

ஸ்மித்தை விட பாட் கம்மின்ஸ் தான் கேப்டன் பொறுப்புக்கு தகுதியானவர். அவர்தான் அணியை பல முறை சிறப்பாக வழி நடத்தி வெற்றியை தேடித் தந்துள்ளார். எனவே அவர் அணிக்கு திரும்பியதும் கேப்டன் பொறுப்பை கம்மின்ஸிடம்தான் ஒப்படைக்க வேண்டும். இந்த பொறுப்பில் ஸ்மித் தொடரக் கூடாது. என்று கூறியுள்ளார். 2014 – 2018 ஆம் ஆண்டுகளில் ஸ்மித் 34 டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக செயல்பட்டுள்ளார். 2018-ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் ஆஸ்திரேலிய அணி சுற்றுப் பயணம் மேற்கொண்டது. அப்போது பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஸ்மித் சிக்கி அவப் பெயரை ஏற்படுத்திக் கொண்டார். இதையடுத்து அவரிடமிருந்து கேப்டன் பொறுப்பு பறிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Cricket