முகப்பு /செய்தி /விளையாட்டு / வெலிங்டன் டெஸ்டில் ஃபாலோ ஆன் ஆனது இலங்கை அணி…. நியூசிலாந்திற்கு வெற்றி வாய்ப்பு பிரகாசம்….

வெலிங்டன் டெஸ்டில் ஃபாலோ ஆன் ஆனது இலங்கை அணி…. நியூசிலாந்திற்கு வெற்றி வாய்ப்பு பிரகாசம்….

பேட்டிங் - பவுலிங்கில் கலக்கிய நியூசிலாந்து அணி.

பேட்டிங் - பவுலிங்கில் கலக்கிய நியூசிலாந்து அணி.

நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சை மட்டுமே விளையாடியுள்ள நிலையில், இலங்கை அணி 303 ரன்கள் பின் தங்கியுள்ளது

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

நியூசிலாந்து அணிக்கு எதிரான 2 ஆவது டெஸ்டில் இலங்கை அணி தொடர்ந்து திணறி வருகிறது. ஃபாலோ ஆன் ஆகியுள்ள நிலையில் நியூசிலாந்து வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் இந்த டெஸ்டில் அதிகரித்துள்ளன. இலங்கை கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் நியூசிலாந்து அணி கடைசி நாளின் கடைசிப் பந்தில் வெற்றி பெற்று சர்வதேச கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை பெற்றது.

இதையடுத்து 2 ஆவது டெஸ்ட் போட்டி வெலிங்டன் மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 123 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 580 ரன்களை குவித்தது. அந்த அணியின் வில்லியம்சன் மற்றும் ஹென்றி நிகோல்ஸ் ஆகியோர் இரட்டை சதம் அடித்து அசத்தினர். இதையடுத்து முதல் இன்னிங்சை தொடர்ந்த இலங்கை அணி 66.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 164 ரன்கள் மட்டுமே எடுத்து ஃபாலோ ஆன் ஆனது. முதல் இன்னிங்சில் கேப்டன் கருணாரத்னே 89 ரன்களும், சண்டிமால் 37 ரன்களும், நிஷான் மதுஷ்கா 19 ரன்களும் எடுத்தனர். மற்றவர்கள் ஒற்றை இலக்கத்தில் வெளியேறினர்.

ஃபாலோ ஆன் ஆனதை தொடர்ந்து இலங்கை அணி 2 ஆவது இன்னிங்சை தொடங்கியுள்ளது. தொடக்க வீரர்கள் ஒஷாடா ஃபெர்னான்டோ 5 ரன்னிலும் கேப்டன் கருணாரத்னே 51 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இன்றைய 3 ஆம் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 2 விக்கெட்டுகளை இழந்து 113 ரன்கள் எடுத்துள்ளது. குசால் மெண்டிஸ் 50 ரன்னும், ஏஞ்செலோ மேத்யூஸ் 1 ரன்னும் எடுத்து களத்தில் உள்ளனர். நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சை மட்டுமே விளையாடியுள்ள நிலையில், இலங்கை அணி 303 ரன்கள் பின் தங்கியுள்ளது. இதனால் நியூசிலாந்து அணி இந்த டெஸ்டிலும் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.

First published:

Tags: Cricket