முகப்பு /செய்தி /விளையாட்டு / சூப்பர் ஓவரில் நியூசிலாந்தை வென்றது இலங்கை அணி… டி20 தொடரில் முன்னிலை

சூப்பர் ஓவரில் நியூசிலாந்தை வென்றது இலங்கை அணி… டி20 தொடரில் முன்னிலை

இலங்கை அணி

இலங்கை அணி

கடைசி பந்தில் நியூசிலாந்து வெற்றி பெற 7 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டபோது இஷ் சோதி ஷனகா வீசிய பந்தை சிக்சருக்கு அனுப்பி மேட்ச்சை டிரா செய்ய வைத்தார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இலங்கை அணி சூப்பர் ஓவரில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகிக்கிறது. இலங்கை கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டித் தொடரை இலங்கை அணி இழந்த நிலையில் இன்று 3 போட்டிகளை கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கியது. ஆக்லாந்தில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பவுலிங்கை முதலில் தேர்வு செய்தது.

இலங்கை அணியின் தொடக்க பேட்ஸ்மேன் பதுன் நிசாங்கா ரன் ஏதும் எடுக்காமல் ஏமாற்றம் அளித்தார். பின்னர் இணைந்த குசால் மெண்டிஸ் மற்றும் பெரேரா இணை அதிரடியாக ரன்களை சேர்த்தது. 9 பந்தில் 25 ரன்கள் எடுத்து குசால் மெண்டிஸ் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த தனஞ்செயா டி சில்வா தன் பங்கிற்கு 15 ரன்கள் சேர்க்க, பின்னர் இணைந்த அசலங்கா – குசால் பெரரோ இணை நியூசிலாந் பந்து வீச்சை வெளுத்து வாங்கியது. இருவரும் 4 ஆவது விக்கெட்டிற்கு 103 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். குசால் பெரேரா 53 ரன்னில் வெளியேற அசலங்கா 67 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்த இலங்கை அணி 196 ரன்கள் குவித்தது.

197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை நோக்கி நியூசிலாந்து அணி விளையாடத் தொடங்கியது. ஓபனிங் பேட்ஸ்மேன்கள் சாட் போவாஸ் 2 ரன்னும், டிம் செய்பர்ட் ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த கேப்டன் டாம் லாதம் 16 பந்தில் 27 ரன்களை அதிரடியாக எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் இணைந்த மார்க் சாப்மேன் – டேரில் மிட்செல் இணை இலங்கை பவுலிங்கை சிறப்பாக எதிர்கொண்டு ரன்களை சேர்த்தது. இருவரும் 4 ஆவது விக்கெட்டிற்கு 66 ரன்கள் எடுத்தனர். டேரில் மிட்செல் 66 ரன்னும், மார்க் சாப்மேன் 33 ரன்னும் எடுக்க அடுத்து வந்த ஜேம்ஸ் நீஷம் 19, ரச்சின் ரவிந்திரா 26 ரன்கள் எடுத்தனர். கடைசி பந்தில் நியூசிலாந்து வெற்றி பெற 7 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டபோது இஷ் சோதி ஷனகா வீசிய பந்தை சிக்சருக்கு அனுப்பி மேட்ச்சை டிரா செய்ய வைத்தார். இதையடுத்து வெற்றியை தீர்மானிக்கும் சூப்பர் ஓவர் தொடங்கியது.

top videos

    சூப்பர் ஓவரில் நியூசிலாந்து அணி 2 விக்கெட்டுகளை இழந்து 8 ரன்கள் எடுத்தது. இதையடுத்து பேட் செய்த இலங்கை அணி 3 பந்துகளில் வெற்றி இலக்கை எட்டியது. இதையடுத்து 3 போட்டிகள் கொண்ட தொடரில் இலங்கை 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. அடுத்த போட்டி 5ஆம் தேதி புதன் அன்று நடைபெறுகிறது.

    First published:

    Tags: Cricket