முகப்பு /செய்தி /விளையாட்டு / ஆப்கானிஸ்தானை வீழ்த்தி ஒருநாள் தொடரை கைப்பற்றியது இலங்கை அணி…

ஆப்கானிஸ்தானை வீழ்த்தி ஒருநாள் தொடரை கைப்பற்றியது இலங்கை அணி…

வெற்றிக் கோப்பையுடன் இலங்கை அணி

வெற்றிக் கோப்பையுடன் இலங்கை அணி

ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுக்கு இலங்கை அணியின் துஷ்மந்தா சமீரா தேர்வு செய்யப்பட்டார்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஆப்கன் அணிக்கு எதிரான 3 ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது. ஆப்கன் கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடியது. முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றிருந்த நிலையில் 2 ஆவது போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட தொடரை 1-1 என்ற கணக்கில் சமநிலைப்படுத்தியது.

இந்த நிலையில் 3 ஆவது மற்றும் அம்பந்தோட்ட ராஜபக்சே மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக குர்பாஸ் மற்றும் இப்ராஹிம் ஸத்ரான் களத்தில் இறங்கினர். குர்பாஸ் 8 ரன்னிலும், ஸத்ரான் 22 ரன்னிலும் ஆட்டமிழக்க அடுத்து வந்த ரஹ்மத் 7 ரன்னும் கேப்டன் ஷாஹிதி 4 ரன்னிலும் வெளியேறினர். சிறிது நேரம் தாக்குப்பிடித்த முகமது நபி 23 ரன்களும், குல்பாதின் 20 ரன்களும் எடுத்தனர். 22.2 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த ஆப்கன் அணி 116 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதையடுத்து 117 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இலங்கை பேட்ஸ்மேன்கள் களத்தில் இறங்கினர். தொடக்க வீரர்கள் பதும் நிசாங்கா மற்றும் திமுத் கருணாரத்னே அரைச்சதம் விளாசி அணியின் வெற்றிக்கு உதவினர். நிசாங்கா 51 ரன்னும், திமுத் கருணாரத்னே 56 ரன்னும் சேர்க்க 16 ஓவர்களில் இலங்கை அணி வெற்றி இலக்கை எட்டியது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை 1-2 என்ற கணக்கில் இலங்கை அணி கைப்பற்றியது. ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுக்கு இலங்கை அணியின் துஷ்மந்தா சமீரா தேர்வு செய்யப்பட்டார்.

First published:

Tags: Cricket