முகப்பு /செய்தி /விளையாட்டு / ஆசிய கோப்பை தொடரை பாகிஸ்தானுக்கு வெளியே நடத்த இலங்கை, வங்கதேசம் ஆதரவு…

ஆசிய கோப்பை தொடரை பாகிஸ்தானுக்கு வெளியே நடத்த இலங்கை, வங்கதேசம் ஆதரவு…

ரோஹித் சர்மா - பாபர் ஆசம்

ரோஹித் சர்மா - பாபர் ஆசம்

பெரும்பாலான நாடுகள் ஆதரவு தெரிவித்திருப்பதால் பாகிஸ்தான் இந்த தொடரை புறக்கணிப்பு செய்யலாம் அல்லது வெளிநாட்டில் நடக்கும் தொடரில் பங்கேற்கலாம்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஆகிய கோப்பை கிரிக்கெட் தொடரை பாகிஸ்தானுக்கு  வெளியே நடத்துவதற்கு இலங்கை மற்றும் வங்கதேச நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இந்த தகவலை பாகிஸ்தான் செய்தி ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. ஆசியகோப்பை கிரிக்கெட் தொடரை பாகிஸ்தானில் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. இங்கு நடைபெற்றால் இந்தியா பங்கேற்காது என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில், பாகிஸ்தான் இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருநதது.

இந்த விவகாரம் தொடர்பாக முன்பு கருத்து தெரிவித்திருந்த ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவர் ஜெய் ஷா, பாகிஸ்தானுக்கு பதிலாக வெளி நாட்டில் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடத்தப்படும் என்று கூறியிருந்தார். இதை பாகிஸ்தான் ஏற்கவில்லை என்றால் அந்த நாட்டிற்கு பதிலாக ஐக்கிய அரபு அமீரகத்தை தொடரில் சேர்க்க முடிவு செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில், பாகிஸ்தானுக்கு வெளியே ஆசிய கோப்பை தொடரை நடத்துவதற்கு இலங்கை மற்றும் வங்கதேச நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. பெரும்பாலான நாடுகள் ஆதரவு தெரிவித்திருப்பதால் பாகிஸ்தான் இந்த தொடரை புறக்கணிப்பு செய்யலாம் அல்லது வெளிநாட்டில் நடக்கும் தொடரில் பங்கேற்கலாம்.

top videos

    ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தான் பங்கேற்காவிட்டால் தொடரை ஒளிபரப்பு செய்யும் நிறுவனங்களுக்கு இழப்பு ஏற்படும். இதனை இந்தியாவில் நடைபெறும் தொடர்கள் மூலம் சரி செய்வோம் என்று ஜெய் ஷா உறுதி அளித்துள்ளார். இதற்கிடையே உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் வரும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடைபெறவுள்ளது. ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்க இந்திய அணியை மத்திய அரசு அனுமதிக்காவிட்டால், உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை பாகிஸ்தான் புறக்கணிக்கும் என்று அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் நஜிம் செதி முன்பு கூறியிருந்தார். ஆசிய கோப்பை தொடரை பாகிஸ்தானுக்கு வெளியே நடத்த வேண்டும் என்று பிசிசிஐ வலியுறுத்துவதைப் போன்று, உலகக் கோப்பை தொடரை இந்தியாவுக்கு வெளியே நடத்த வேண்டும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வலியுறுத்த வாய்ப்புள்ளதால் இந்த விவகாரம் தற்போது சூடு பிடித்துள்ளது.

    First published:

    Tags: Cricket