முகப்பு /செய்தி /விளையாட்டு / ‘வகுப்பறைக்கு வெளியே குழந்தைளுக்கு வாழ்க்கை பாடங்களை கற்றுக் கொடுப்பது விளையாட்டு’ – ராகுல் டிராவிட் பேச்சு

‘வகுப்பறைக்கு வெளியே குழந்தைளுக்கு வாழ்க்கை பாடங்களை கற்றுக் கொடுப்பது விளையாட்டு’ – ராகுல் டிராவிட் பேச்சு

ராகுல் டிராவிட்

ராகுல் டிராவிட்

பிள்ளைகளுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துதல், தொடர்புகொள்ளும் திறமை, ஆரோக்கியமான வாழ்க்கை முறை ஆகியவற்றில் பெற்றோர் கவனம் செலுத்த வேண்டும்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

வகுப்பறைக்கு வெளியே குழந்தைகளுக்கு வாழ்க்கை பாடங்களைக் கற்றுக் கொடுப்பது விளையாட்டுதான் என்று இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறியுள்ளார். விளையாட்டு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று ராகுல் டிராவிட் பேசியதாவது- போட்டிகளின் போது கோப்பையை வெல்வதற்கு பலரும் கவனம் செலுத்துகிறார்கள். தற்போதைய சூழலில இந்திய அணி உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்று பலரும் என்னிடம் கூறுகின்றனர். இந்திய அணியில் நானும் சிறிய அளவு பங்களிப்பு செய்கிறேன்.

பெற்றோர் தங்கள்து பிள்ளைகளை சேர்க்கும்போது நாட்டுக்காக பல பதக்கங்களையும், கோப்பைகளையும் வெல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் சேர்க்கிறார்கள் என்று நான் கருதவில்லை. விளையாட்டு உங்களுக்கு வாழ்க்கை முறை, ஆரோக்கியமான வாழ்வு, பாடத்தில் கவனம் உள்ளிட்டவற்றை கற்றுத் தரும். நட்புணர்வை நாம் விளையாட்டில் அதிகம் கற்றுக் கொள்ளலாம். விளையாட்டை விட பிள்ளைகளுக்கு மிகச்சிறந்த அளவு கற்றுத் தரும் விஷயம் எதுவுமே இருக்க முடியாது. வகுப்பறைக்கு வெளியே குழந்தைகளுக்கு வாழ்க்கை பாடங்களை கற்றுத் தருவது விளையாட்டு.

பிள்ளைகளுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துதல், தொடர்புகொள்ளும் திறமை, ஆரோக்கியமான வாழ்க்கை முறை ஆகியவற்றில் பெற்றோர் கவனம் செலுத்த வேண்டும். இதைத் தான் விளையாட்டு குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்கிறது. இதுதான் அடிப்படையான விஷயம். இதனுடன் குழந்தைகள் பதக்கங்களை வென்றால் அது நமக்கு கூடுதல் பலனாக அமையும். விளையாட்டு சமூகங்களை கட்டமைக்கிறது. வெவ்வேறு நாடு, மொழி, சமூக பின்புலங்கள் கொண்ட வீரர்களை ஓரணியில் இணைக்கிறது. இவ்வாறு ராகுல டிராவிட் கூறினார்.

First published:

Tags: Rahul Dravid