முகப்பு /செய்தி /விளையாட்டு / 3ஆவது ஒருநாள் போட்டியில் நெதர்லாந்தை எளிதாக வென்றது தென்னாப்பிரிக்க அணி…

3ஆவது ஒருநாள் போட்டியில் நெதர்லாந்தை எளிதாக வென்றது தென்னாப்பிரிக்க அணி…

தென்னாப்பிரிக்க அணி

தென்னாப்பிரிக்க அணி

39.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த நெதர்லாந்து அணியால் 224 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

நெதர்லாந்து அணிக்கு எதிரான 3 ஆவது ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 146 ரன்கள் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற்றது.  நெதர்லாந்து கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியுள்ளது. முதல் போட்டி பயிற்சி ஆட்டமாக தென்னாப்பிரிக்கா இன்விடேஷன் அணிக்கும் – நெதர்லாந்துக்கும் இடையே நடைபெற்றது. இதில் தென்னாப்பிரிக்கா இன்விடேஷன் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2 ஆவது போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற தென்னாப்பிரிக்க அணி தொடரை கைப்பற்றியது.

இந்த நிலையில் 3 ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஜோகன்னஸ்பெர்க் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பவுலிங்கை முதலில் தேர்வு செய்தது. இதையடுத்து தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன்கள் குவின்டன் டி காக், கேப்டன் பவுமா ஆகியோர் களத்தில் இறங்கினர். பவுமா 6 ரன்னும், குவின்டன் டி காக் 8 ரன்னும் எடுத்து வெளியேற அடுத்து வந்த வாண் டர் டசன் 25 ரன்கள் எடுத்தார். இதன்பின்னர் இணைந்த மார்க்ரம், மில்லர் இணை அதிரடியாக விளையாடிய ரன்களை சேர்த்தது. இருவரும் 5 ஆவது விக்கெட்டிற்கு 199 ரன்கள் சேர்த்தனர். 61 பந்தில் 91 ரன்கள் எடுத்து மில்லர் ஆட்டமிழந்தார்.

top videos

    தொடர்ந்து அதிரடியாக விளையாடிய எய்டன் மார்க்ரம் 126 பந்துகளில் 7 சிக்சர் மற்றும் 17 பவுண்டரியுடன் 175 ரன்கள் குவித்தார். 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த தென்னாப்பிரிக்க அணி 370 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 371 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி நெதர்லாந்து அணி விளையாடியது. 39.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த நெதர்லாந்து அணியால் 224 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்து 146 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. அதிகபட்சமாக மூசா அகமது 61 ரன்னும் கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் 42 ரன்னும், மேக்ஸ்டிவோட் 47 ரன்னும் எடுத்தனர். தென்னாப்பிரிக்க அணி தரப்பில் சிசான்டா மகலா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    First published:

    Tags: Cricket