முகப்பு /செய்தி /விளையாட்டு / ஷ்ரேயாஸ் ஐயருக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது… உலகக்கோப்பை தொடரில் இடம்பெறுவார் என தகவல்

ஷ்ரேயாஸ் ஐயருக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது… உலகக்கோப்பை தொடரில் இடம்பெறுவார் என தகவல்

ஷ்ரேயாஸ் ஐயர்

ஷ்ரேயாஸ் ஐயர்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஷ்ரேயாஸ் இடம்பெற மாட்டார் என்ற அறிவிப்பு இந்திய அணிக்கு சற்று சவாலாகவே பார்க்கப்படுகிறது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய பேட்ஸ்மேனாக கருதப்படும் ஷ்ரேயாஸ் ஐயருக்கு முதுகு பகுதியில் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. அவர் விரைவில் ஆடுகளத்திற்கு திரும்புவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. காயம் காரணமாக ஷ்ரேயாஸ் ஓய்வில் இருந்து வருவதால் அவர் கேப்டனாக இடம்பெற்றுள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஐபிஎல் தொடரில் கடும் சவால்களை சந்தித்து வருகிறது. ஷ்ரேயாஸிற்கு பதிலாக ஆஸ்திரேலிய தொடரில் இடம்பெற்ற வீரர்கள் போதிய திறமையை வெளிப்படுத்த தவறி விட்டனர்.

இந்திய அணியில் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் 4 ஆவது பேட்ஸ்மேனாக களத்தில் இறங்கும் ஷ்ரேயாஸ், அணியின் வெற்றிக்கு பலமுறை பங்களிப்பு செய்துள்ளார். 28 வயதாகும் ஷ்ரேயாஸிற்கு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடரின்போது முதுகில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து தொடரில் இருந்து விலகிய அவருக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் முதுகின் அடிப்பகுதியில் ஷ்ரேயாஸிற்கு  அறுவை சிகிச்சை தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளது. லண்டனில் செய்யப்பட்ட இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளதாக மருத்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

top videos

    சிகிச்சை தொடர்ந்து ஷ்ரேயாஸ் இன்றும் சில வாரங்களுக்கு ஓய்வில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளார். இதனால் ஐபிஎல் தொடர் மட்டுமல்லாமல் அடுத்து வரக்கூடிய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியிலும் ஷ்ரேயாஸ் இடம்பெறாத நிலை ஏற்பட்டுள்ளது. ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியின் கேப்டனாக ஷ்ரேயாஸ் இருந்து வந்தார். தற்போது அவர் இல்லாத சூழலில் அணியை நிதிஷ் ராணா வழி நடத்தி வருகிறார். ஐபிஎல் தொடரில் ஷ்ரேயாஸின் இழப்பு ஓரளவு சரி செய்யப்பட்டாலும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் அவர் இடம்பெற மாட்டார் என்ற அறிவிப்பு இந்திய அணிக்கு சற்று சவாலாகவே பார்க்கப்படுகிறது. மேலும், ரிஷப் பந்த், பும்ரா உள்ளிட்ட வீரர்களும் காயம் காரணமாக ஓய்வில் இருப்பதால் டெஸ்ட் இறுதிப் போட்டியை இந்திய அணி எப்படி சமாளிக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர். இருப்பினும் ஷ்ரேயாஸ் அக்டோபர் மாதம் தொடங்கவுள்ள உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்பது ஏறக்குறைய உறுதி செய்யப்பட்டுள்ளது.

    First published:

    Tags: Cricket