முகப்பு /செய்தி /விளையாட்டு / ‘ஆசியாவின் பெஸ்ட் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்’ – பாகிஸ்தான் வீரரை புகழும் சேவாக்

‘ஆசியாவின் பெஸ்ட் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்’ – பாகிஸ்தான் வீரரை புகழும் சேவாக்

வீரேந்திர சேவாக்

வீரேந்திர சேவாக்

சச்சின் டெண்டுல்கர் ஓபனிங் மற்றும் நம்ப 3, 4 இல் விளையாடக் கூடியவர். அதனால் அவரை இந்த வீரருடன் ஒப்பிட முடியாது.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஆசியாவின் பெஸ்ட் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் என பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனை விரேந்தர் சேவாக் புகழ்ந்து கூறியுள்ளார். பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளர் கவுரவ் கபூருக்கு அளித்துள்ள பேட்டியில் இந்திய அணியின் முன்னாள் பேட்ஸ்மேனும் வர்ணனையாளருமான சேவாக் கூறியதாவது- எல்லோரும் சச்சின் டெண்டுல்கரைப் பற்றி பேசுகிறார்கள். ஆனால் ஆசியாவின் மிகச்சிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் என்றால் அவர் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் ஆகத்தான் இருக்க முடியும்.

சச்சின் டெண்டுல்கர் ஓபனிங் மற்றும் நம்ப 3, 4 இல் விளையாடக் கூடியவர். அதனால் அவரை இன்சமாம் உடன் ஒப்பிட முடியாது. ஆனால் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை என ஆசிய நாடுகளில் உள்ள பேட்ஸ்மேன்களை பார்க்கும்போது, இன்சமாம் தான் மிகச்சிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக இருப்பார். அவரை விட மிடில் ஆர்டரில் சிறப்பாக விளையாடக் கூடிய ஒருவரை நான் பார்த்ததில்லை.  சேசிங்கின் போது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்.

இன்சமாம் உல் ஹக்

2003 – 04 ஆண்டுகளின்போது, கடைசி 10 ஓவருக்கு 80 ரன்கள் எடுக்க வேண்டிய நிலை ஏற்படும். அப்போது மிக எளிதாக சேஸிங் செய்து விடலாம் என்று அவர் கூறுவார். அந்த காலகட்டத்தில் இத்தகைய ஸ்கோர்களை எடுக்க எந்தவொரு பேட்ஸ்மேன்களும் பதற்றம் கொள்வார்கள். ஆனால் இன்சமாம் சர்வசாதாரணமாக அணியை வெற்றி பெற வைப்பார். இவ்வாறு சேவாக் கூறியுள்ளார்.

இதையும் படிங்க - இஸ்லாமியர்கள் குறித்து சர்ச்சை பதிவு… குஜராத் டைட்டன்ஸ் அணி வீரர் மன்னிப்பு கேட்டார்…

பாகிஸ்தான் அணிக்காக 120 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 8,830 ரன்களும், 378 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 11,739 ரன்களையும் இன்சமாம் எடுத்துள்ளார்.

First published:

Tags: Cricket