முகப்பு /செய்தி /விளையாட்டு / ஒருநாள் போட்டிகளில் ரன் எடுக்க சூர்யகுமார் திணறுவது ஏன்? – பயிற்சியாளர் டிராவிட் விளக்கம்

ஒருநாள் போட்டிகளில் ரன் எடுக்க சூர்யகுமார் திணறுவது ஏன்? – பயிற்சியாளர் டிராவிட் விளக்கம்

சூர்ய குமார் யாதவ் - டிராவிட்

சூர்ய குமார் யாதவ் - டிராவிட்

அதிகம் நெருக்கடி கொடுக்கும் டி20 போட்டிகளிலேயே அவர் தனது திறமையை நிரூபித்துள்ளார். நாம் அவருக்கு இன்னும் சில நேரம் கொடுத்து பொறுமையாக இருக்க வேண்டும். - டிராவிட்

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணியின் சூர்ய குமார் யாதவ் திணறி வரும் நிலையில், அதற்கான காரணம் குறித்து அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் விளக்கம் அளித்துள்ளார். மும்பையில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், விசாகப்பட்டினத்தில் நடந்த 2 ஆவது போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

மும்பை மற்றும் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற ஒருநாள் போட்டிகளில் 4 ஆவது பேட்ஸ்மேனாக சூர்ய குமார் களத்தில் இறங்கினார். இந்த 2 மேட்ச்சிலும் தான் சந்தித்த முதல் பந்தில், மிட்செல் ஸ்டார்க் வேகத்தில் எல்.பி.டபிள்யூ. முறையில் அவர் ஆட்டமிழந்தார். டி20 போட்டிகளில் முன்னணி ஆட்டக்காரராக இருக்கும் சூர்யகுமார் யாதவ், ஒருநாள் போட்டிகளில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சூர்யகுமாரின் ஆட்டம் குறித்து அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது-

ஷ்ரேயாஸ் காயமடைந்திருப்பது அணிக்கு சற்று பின்னடைவுதான். இதனால் அவருடைய நம்பர் 4 இடம் காலியாக உள்ளது. அந்த இடத்தில் சரியானஆட்டக்காரர் இன்னும் அமையாமல் உள்ளனர். அந்த வகையில் சூர்யகுமார் யாதவ் நம்பர் 4-இல் இறங்கி ரன்கள் எடுக்க சிரமப்படுவதை நீங்கள் பார்க்கலாம். அவர் 10 ஆண்டுகளாக டி20 போட்டிகளில் விளையாடி வருகிறார். ஒருநாள் போட்டிகளில் அவர் அதிகம் விளையாடியது கிடையாது. எனவே சூர்யகுமார் பற்றி அதிகம் கவலைப்பட தேவையில்லை. ஏனென்றால் அவர் இப்போதுதான் ஒருநாள் போட்டிகளை விளையாடி வருகிறார். அதிகம் நெருக்கடி கொடுக்கும் டி20 போட்டிகளிலேயே அவர் தனது திறமையை நிரூபித்துள்ளார். நாம் அவருக்கு இன்னும் சில நேரம் கொடுத்து பொறுமையாக இருக்க வேண்டும். இதற்கு நிச்சயமாக பலன் கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

First published:

Tags: Cricket