முகப்பு /செய்தி /விளையாட்டு / விமர்சனங்களுக்கு பேட்டால் பதில் சொன்ன ரஹானே... டெஸ்ட் அணியில் மீண்டும் கம்பேக் கொடுத்த கதை...!

விமர்சனங்களுக்கு பேட்டால் பதில் சொன்ன ரஹானே... டெஸ்ட் அணியில் மீண்டும் கம்பேக் கொடுத்த கதை...!

ரஹானே

ரஹானே

world test championship 2023 | உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான இந்திய அணியில் மீண்டும் ரஹானே இடம்பிடித்து அசத்தியுள்ளார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் ஜூன் 7ம் தேதி முதல் 11ம் தேதி வரை கலைகட்டவுள்ளது. இதற்காக ரோஹித் சர்மா தலைமையில் 15 பேர் கொண்ட அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. அதில் சுப்மன் கில், புஜாரா, விராட் கோலி, அஜிங்க்யா ரஹானே, கே எல் ராகுல், கேஎஸ் பாரத், ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், ஷர்துல் தாக்கூர், முகமது. ஷமி, முகமது சிராஜ், உமேஷ் யாதவ், ஜெய்தேவ் உனத்கட் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.

நடப்பாண்டு வீரர்களின் ஒப்பந்த பட்டியலில் இருந்தே நீக்கப்பட்ட ரஹானே மீண்டும் அணியில் இடம்பிடித்து அசத்தியுள்ளார். 34 வயதான ரஹானே 2011ம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அறிமுகமாகி 2013ம் ஆண்டு ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் களம் கண்டார். 2013ம் ஆண்டு முதல் 2022 வரை 82 போட்டிகளில் விளையாடி 12 சதம், 25 அரைசதம் என 4,931 ரன்கள் குவித்துள்ளார்.

தொடக்கத்தில் சிறப்பாக விளையாடிய ரஹானேவின் ஆட்டத்திறன் 2019ம் ஆண்டிற்கு பிறகு மங்க ஆரம்பித்தது. 2020ம் ஆண்டு முதலான 3 ஆண்டுகளில் 19 போட்டிகளில் களம் இறங்கிய ராஹானே, 809 ரன்களை மட்டுமே எடுத்தார். மூன்று ஆண்டுகளின் சராசரி 25.5 என்பதே அவரை அணியிலிருந்தும், பிசிசிஐ வீரர்களின் ஒப்பந்த பட்டியலிருந்தும் நீக்குவதற்கு காரணமாக அமைந்தது.

இந்திய அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்ட ரஹானே ரஞ்சி கோப்பை தொடரில் களமிறங்கினார். ஏழு போட்டிகளில் 634 ரன்கள் விளாசி தனது திறமையை நிரூபித்தார். குறிப்பாக ஹைதராபாத் அணிக்கு எதிராக இரட்டை சதமும், அஸ்ஸாமிற்கு எதிராக 191 ரன்களும் விளாசி தேர்வுக்குழுவிற்கு தனது பேட் மூலம் பதிலளித்தார். அத்துடன் நடப்பு ஆண்டு ஐபிஎல் தொடரில் ஐந்து போட்டிகளில் இரண்டு அரைசதத்துடன் 209 ரன்கள் குவித்துள்ளார்.

2021-ல் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை ரஹானே தலைமையிலான இந்திய அணி கைப்பற்றியது. விராட் கோலிக்கு பிறகு ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வென்ற ஒரே கேப்டன் ரஹானே என்பது கூடுதல் சிறப்பாகும். இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக வலம் வந்த ரஹானே அணியிலிருந்து நீக்கப்பட்ட பிறகும் தன்னை நிரூபித்து மீண்டும் அணியில் இடம் பிடித்திருப்பது தோல்வியிலிருந்து மீண்டெழ நினைக்கும் அனைவருக்கும் பாடமாக அமைந்துள்ளது.

First published:

Tags: Ajinkya Rahane, BCCI, ICC World Test Championship