முகப்பு /செய்தி /விளையாட்டு / ஆஃப்கானிஸ்தானுக்கு எதிராக மோசமான ஆட்டம்... அசாம் கானை உருவக் கேலி செய்த ரசிகர்- வைரலாகும் வீடியோ

ஆஃப்கானிஸ்தானுக்கு எதிராக மோசமான ஆட்டம்... அசாம் கானை உருவக் கேலி செய்த ரசிகர்- வைரலாகும் வீடியோ

அசாம் கான்

அசாம் கான்

பாகிஸ்தான் வீரர் அசான் கானுக்கு எதிராக ரசிகர் உருவக் கேலி செய்த வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.

  • Last Updated :
  • internat, Indiadubai

பாகிஸ்தான் மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெற்றுவருகிறது. பாகிஸ்தானைப் பொறுத்தவரை இந்த தொடரில் பாபர் அசாம், முகமது ரிஸ்மான் உள்ளிட்ட சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, பி.எஸ்.எல் தொடரில் அசத்திய இளம் வீரர்களுடன் களமிறங்கியது. சடாப் கான் தலைமையில் களமிறங்கிய பாகிஸ்தானுக்கு இந்தத் தொடர் ஏமாற்றமாக அமைந்தது.

இந்தத் தொடரின் முதல் போட்டி கடந்த 24-ம் தேதி நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட் செய்தது. இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி 92 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்தப் போட்டியில் ஆப்கானிஸ்தான் எளிதாக வெற்றி பெற்றது.

இதைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது போட்டியிலும் ஆப்கானிஸ்தான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி போட்டியையும் வென்று தொடரையும் வென்றது. ஆப்கானிஸ்தானுக்கு எதிராக டி20 தொடரை இழந்த நாடாக பாகிஸ்தான் இடம்பிடித்துள்ளது.

இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணியின் விக்கெட் கீப்பராக உள்ள அசாம் கானின் ஆட்டம் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது. அசாம் கான் பேட்ஸ்மேனாக மட்டுமல்ல விக்கெட் கீப்பராக சரியாக பீல்டிங் செய்யாமல் பாகிஸ்தானின் ரன் இழப்புக்கு காரணமாக அமைந்தது.

top videos

    மேலும், அவரது உருவத்தைக் கேலி வைத்து ரசிகர்கள் கேலி செய்த வீடியோ இணையத்தில் வைரலாகிருகிறது. பார்வையாளர் ஒருவர், அசாம் கானைப் பார்த்து சைகை மூலம் போய் சாப்பிடு என்பதுபோல செய்த வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.

    First published:

    Tags: Pakistan cricket