முகப்பு /செய்தி /விளையாட்டு / ஆசிய கோப்பை போட்டிகள் பாகிஸ்தானில் நடக்குமா.. இந்திய அணி என்ன செய்யப்போகிறது.. வெளியான புது தகவல்

ஆசிய கோப்பை போட்டிகள் பாகிஸ்தானில் நடக்குமா.. இந்திய அணி என்ன செய்யப்போகிறது.. வெளியான புது தகவல்

இந்தியா - பாகிஸ்தான் மோதல்

இந்தியா - பாகிஸ்தான் மோதல்

இந்தியான தனது போட்டிகளை பாகிஸ்தானில் விளையாடாமல் வேறு நாடுகளில் விளையாட போவதாக முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

  • Last Updated :
  • Delhi, India

வரும் செப்டம்பர் மாதம் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறவுள்ள நிலையில், இந்த போட்டிகள் எங்கு நடைபெறும், அதில் இந்திய அணி எவ்வாறு பங்கேற்கும் என்ற குழப்பம் தொடர்ந்து வந்தது. காரணம், 2023ஆம் ஆண்டில் ஆசிய கோப்பை தொடர் பாகிஸ்தானில் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. அதேவேளை, இந்திய அணி பாகிஸ்தான் நாட்டிற்கு பயணம் செய்யாது என கடந்தாண்டு ஜெய் ஷா கருத்து தெரிவித்து பரபரப்பை கிளப்பினார்.

மும்பை பயங்கரவாத தாக்குதலுக்குப் பின் இந்திய அணி பாகிஸ்தான் நாட்டிற்கு சுற்றுப் பயணம் செல்லவே இல்லை. இந்தியா அணி பாகிஸ்தான் சென்று கடைசியாக விளையாடியது 2008ஆம் ஆண்டு ஆசிய கோப்பை போட்டியில் தான். எனவே, போட்டி தொடரை இந்தியா அணி புறக்கணிக்குமா அல்லது தொடர் வேறு நாட்டிற்கு மாற்றப்படுகிறதா என்ற குழப்பங்கள் நிலவின.

4 வருடங்களாக இந்திய அணி பாகிஸ்தானிற்கு செல்லவே இல்லை என்ற நிலையில், இந்த குழப்பத்திற்கு இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்களும் இணைந்து பேசி ஒரு தீர்வுக்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ஆசிய கோப்பை ஒரு நாள் தொடரில் இந்திய அணி பங்கேற்கும் எனவும், அதேவேளை தனது போட்டிகளை பாகிஸ்தானில் விளையாடாமல் வேறு நாடுகளில் விளையாட போவதாக முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

இதையும் படிங்க: ஐபிஎல் Impact Player-ஆக இவர்களை மட்டும்தான் பயன்படுத்த முடியும்.. பிசிசிஐயின் புதிய விதிகள் என்னென்ன?

எனவே, இந்தியா அணி விளையாடும் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகம், ஓமான், இலங்கை போன்ற ஏதோ ஒரு நாட்டில் நடைபெறும் எனக் கூறப்படுகிறது. செப்டம்பர் மாதம் நடைபெறும் இந்த ஆசிய கோப்பை தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஒரே குரூப்பில் உள்ளன. எனவே, இரு அணிகளும் ஆசிய கோப்பை தொடரில் நேருக்கு நேர் மோதவுள்ளதால் ரசிகர்கள் ஆர்வத்துடன் போட்டியை கான எதிர்பார்ப்பில் உள்ளனர்.

First published:

Tags: Asia cup, India vs Pakistan, Pakistan cricket