பாகிஸ்தான் கிரிக்கெட்டில் சர்ச்சைகளுக்கு பஞ்சம் இருக்காது. சூதாட்ட புகார்கள், மிரட்டல்கள் என பாக்., வீரர்கள் தொடர்பான செய்திகள் அடிக்கடி அடிபடும். கிரிக்கெட் உலகுக்கு மீண்டும் ஒரு பரபரப்பான தகவலை பகிர்ந்துள்ளார் பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் நசீர். ஸ்லோ பாய்சன் கலந்து கொடுத்து அவரை கொல்ல சதி நடத்தாகவும் மருத்துவமனை அறிக்கை வாயிலாக தான் இந்த தகவலே தனக்கு தெரியவரும். ரூ. 40 லட்சம் வரை செலவு செய்து அப்ரிடி தான் என்னை காப்பாற்றினார் அவருக்கு நான் என்ன கைமாறு செய்யப்போகிறேன் எனத் தெரியவில்லை எனக் கூறியுள்ளார்.
இம்ரான் நசீர் பேசுகையில், “ உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். மருத்துவமனையின் அறிக்கை எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. எனக்கு விஷம் கொடுத்தது அப்போது தான் தெரியவந்தது. ஆட்களை மெல்ல கொல்லும் விஷத்தை எனக்கு கொடுத்துள்ளனர். அந்த விஷமானது எனது உடல் நிலையை மோசமாக்கியது. என்னுடய மூட்டுகளை அது தாக்கி பாதிப்பை ஏற்படுத்தியது. 8 -10 வருடங்களாக சிகிச்சை எடுத்து வருகிறேன். என்னுடைய மூட்டுகள் இதன்காரணமாக பாதிப்படைந்தது. நான் 6 வருடங்களாக கடுமையாக சிரமப்பட்டேன். என்னை படுத்த படுக்கையாகவிடாதீர்கள் என கடவுளை வேண்டினேன். நல்லவேளையாக அவ்வாறு நடக்கவில்லை.
நான் இப்போது நடைப்பயிற்சி மேற்கொண்டு வருகிறேன். என்னை பார்க்கும் பலரும் நீங்கள் நன்றாக இருக்கிறீர்கள் எனக் கூறுகிறார்கள். எனக்கு நிறைய நபர்கள் மீது சந்தேகம் இருக்கிறது. நான் என்ன சாப்பிட்டேன் எப்போது சாப்பிட்டேன் என எனக்கு தெரியவில்லை. ஏனென்றால் அந்த விஷமானது உடனடியாக வேலை செய்யக்கூடியது இல்லை. அது உங்களை வருடக்கணக்கில் மெல்ல கொல்லும். நான் யாருக்கும் எந்த தீங்கும் செய்யவில்லை. என்னை கொல்ல யார் நினைத்தார்கள் எனத் தெரியவில்லை எனக் கண்கள் கலங்கினார்.
Also Read: சிஎஸ்கே-க்கு வாய்ப்பு இல்ல ராஜா.. சஞ்சு இல்லைன்னா கோலி-க்குதான் கப்பு - ஸ்ரீசாந்த் அதிரடி கருத்து
சரியான நேரத்தில் உதவிய அப்ரிடி:
இம்ரான் நசீர் பாகிஸ்தானில் நீண்ட நாள் மருத்துவ சிகிச்சை எடுக்க வேண்டியிருந்தது. இதற்கு 15 லட்சம் வரை செலவு செய்ய வேண்டியிருந்தது. இம்ரான் நசீர் தன்னுடைய சேமிப்பு முழுவதும் செலவு செய்துவிட்டார் இறுதி சிகிச்சையின் போது கைகளில் பணமில்லாமல் நிர்கதியாய் இருந்துள்ளார். சரியான நேரத்தில் அப்ரிடி தான் உதவி புரிந்து இம்ரான் நசீருக்கு வாழ்க்கை கொடுத்துள்ளார்.
நன்றியுடன் இதனை நினைவுப்படுத்திய இம்ரான், “ ஷாகித் அப்ரிடி எனக்கு சரியான நேரத்தில் உதவி புரிந்தார். ஷாகித்தை பார்க்கும் போது என்னிடம் இருந்த எல்லாவற்றையும் இழந்திருந்தேன். அப்போது என்னுடைய மருத்துவருக்கு பணம் அனுப்பினார் ஷாகித். அவருடைய வார்த்தைகள் இன்னும் நினைவிருக்கிறது. எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை என் சகோதரன் குணமடைந்து வரவேண்டும் என்றார். அவர் எனக்காக 40 - 50 லட்சம் வரை செலவு செய்துள்ளார். ” என்றார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cricket, Shahid Afridi, Tamil News