ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட்டில் மிட்செல் ஸ்டார்க் மிரட்டலில் இந்திய பேட்ஸ்மேன்கள் சரணடைந்தனர். 117 ரன்களில் இந்தியா சுருண்ட நிலையில் ஆஸ்திரேலியா வீரர்கள் அசால்டாக 11 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 121 ரன்களை எடுத்து இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தனர்.
இந்திய பேட்ஸ்மேன்கள் லெஃப்ட் ஆர்ம் ஃபேசர்களுக்கு எதிரான தடுமாறுவது இது முதல் முறையல்ல. 2017-ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் ட்ராபி போட்டியில் முகமது அமிர் பந்துவீச்சில் சுருண்டது. அதேபோல் 2019 உலகக்கோப்பை அரையிறுதியில் ட்ரெண்ட் போல்ட் பந்துவீச்சில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் தாக்குப்பிடிக்க முடியாமல் நடையை கட்டினார்.
இந்த நிலையில் பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் வாசிம் அக்ரம் இந்திய பேட்ஸ்மேன்கள் இடது கை பந்துவீச்சாளர்களுக்கு எதிராக திணறுவதாக கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய வாசிம் அக்ரம் , “விராட் கோலி, ரோஹித் ஷர்மா, கே.எல்.ராகுல் ஆகியோர் சிறந்த வீரர்கள். கே.எல்.ராகுல் கடந்த போட்டியை வென்று கொடுத்தார். இந்திய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் மட்டும் இடது கை வேகப்பந்துவீச்சில் அவுட்டாக வில்லை. மற்ற வீரர்களும் விக்கெட்டுகளை தாரை வார்த்து சென்றனர். இந்த பிட்ச்-யை பார்க்கும் போது எதோ ஆஸ்திரேலியாவில் போட்டி நடப்பது போன்று இருந்தது.
Also Read: சிஎஸ்கே-க்கு வாய்ப்பு இல்ல ராஜா.. சஞ்சு இல்லைன்னா கோலி-க்குதான் கப்பு - ஸ்ரீசாந்த் அதிரடி கருத்து
2-வது ஒருநாள் போட்டியின் போது மழைக்கு பின்னர் பிட்ச் பச்சை பசேல் என காட்சியளித்தது. அப்போது போட்டி நியூசிலாந்தில் நடப்பது போல் இருந்தது. இந்த பிட்சை அருமையாக தயார் செய்த பராமரிப்பாளருக்கு பாராட்டுகளை தெரிவிக்க வேண்டும். இது ஒரு சிறிய போட்டி ஆஸ்திரேலியா சிறப்பாக விளையாடியது. இந்த ஒருநாள் தொடரையும் தற்போது 1-1 என்ற கணக்கில் சமன் செய்துவிட்டனர்.
இந்தப் போட்டியில் பந்து நன்றாக ஸ்விங் ஆனது. ஆஸ்திரேலியா வீரர்கள் விரைவாக ரன்களை எடுத்தனர். இந்திய வீரர் சிராஜ் வீசிய சில ஓவர்களை பார்த்தேன் இரண்டு பக்கங்களில் பந்து நன்றாக ஸ்விங் ஆனது. நான் இந்திய கிரிக்கெட்டை தொடர்ந்து கவனிப்பதில்லை. அவர்களிடம் சிறந்த வீரர்கள் இருக்கிறார்கள் எப்படி அட்ஜெஸ்ட் செய்ய வேண்டும் என அவர்களுக்கு தெரியும். மிட்செல் ஸ்டார்க் சிறப்பாக பந்து வீசினார். அவர் ஒரு சிறந்த பந்துவீச்சாளர் இதில் எந்த சந்தேகமும் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cricket, Kl rahul, Rohit sharma, Virat Kohli