முகப்பு /செய்தி /விளையாட்டு / “கிரிக்கெட் பார்க்க சலிப்பா இருக்கு... ஒருநாள் கிரிக்கெட்டை நான்கா பிரிங்க” - சச்சின் டெண்டுல்கர்

“கிரிக்கெட் பார்க்க சலிப்பா இருக்கு... ஒருநாள் கிரிக்கெட்டை நான்கா பிரிங்க” - சச்சின் டெண்டுல்கர்

சச்சின் டெண்டுல்கர்

சச்சின் டெண்டுல்கர்

ஒருநாள் போட்டிகளில் 15 முதல் 40 ஓவர்களுக்குள் ஓர் அணியின் வெற்றி, தோல்வியை கணித்து விட முடிவதாக சச்சின் டெண்டுல்கர் குறிப்பிட்டார்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Delhi, India

டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முன்னாள் கிரிக்கெட் வீரரரும், சதத்தில் சதம் அடித்தவருமான சச்சின் டெண்டுல்கர், தற்போது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியின் முடிவை எளிதில் கணித்துவிட முடிவதால், அதன் மீதான சுவாரஸ்வம் குறைந்து விட்டதாக கூறினார்.

குறிப்பாக, ஓர் இன்னிங்சில் இரண்டு புதிய பந்துகள் பயன்படுத்தப்படுவதால், பந்தை ரிவர்ஸ் ஸ்விங் (Reversing) செய்வதில் பந்து வீச்சாளர்களுக்கு கடும் சவால் ஏற்படுவதாக கூறினார்.

இதையும் படிக்க :  ஜியோ சினிமாவின் டாடா ஐபிஎல் 2023 - பேட்டிங் களமிறங்கிய தோனி - சூர்யகுமார் யாதவ் ஜோடி!

மேலும், 15 முதல் 40 ஓவர்களுக்குள் ஓர் அணியின் வெற்றி தோல்வியை கணித்து விட முடிவதாக குறிப்பிட்டார். இதனால், போட்டியை பார்ப்பவர்களுக்கு சலிப்பு ஏற்படுவதாக தெரிவித்தார். எனவே, பேட்டிங் மற்றும் பந்தவீச்சுக்கு சாதகமான விதிமுறைகளை வகுத்தால் மட்டும் தான் ஒருநாள் போட்டி மீதான ஆர்வத்தை கூட்ட முடியும் என சச்சின் வலியுறுத்தினார்.

அத்துடன், ஒருநாள் கிரிக்கெட் போட்டியை 25, 25 ஓவர்களாக 4 கால் பகுதிகளாக டெஸ்ட் போட்டிகளை போல நடத்தினால் சுவாரஸ்யத்தை மேலும் கூட்ட முடியும் என தனது யோசனையை தெரிவித்தார். டெஸ்ட் போட்டிகளை போல இல்லாமல், ஒரு பேட்ஸ்மேன் அவுட் ஆகிவிட்டால், அடுத்த இன்னிங்சில் இருக்கும் 25 ஓவர்களுக்கு அவரால் விளையாட முடியாது. அப்படி விளையாடினால் மேலும் சுவாரசியத்தை கூட்ட உதவும் என அவர் தனது கருத்தை தெரிவித்தார்.

First published:

Tags: Cricket, ODI, One day match, Sachin tendulkar