முகப்பு /செய்தி /விளையாட்டு / ‘சஞ்சு சாம்சனுக்கு மேலும் ஒரு வாய்ப்பு தரலாம்’ – முன்னாள் வீரர் வலியுறுத்தல்

‘சஞ்சு சாம்சனுக்கு மேலும் ஒரு வாய்ப்பு தரலாம்’ – முன்னாள் வீரர் வலியுறுத்தல்

சஞ்சு சாம்சன்

சஞ்சு சாம்சன்

சஞ்சு சாம்சனுக்கு ஒரு வாய்ப்பு அளிப்பதில் தவறு ஏதும் இல்லை என்று நினைக்கிறேன். அவர் வாய்ப்பு கிடைத்தபோதெல்லாம் சிறப்பாக விளையாடியுள்ளார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் சூர்ய குமார் யாதவ் ரன்கள் எடுக்க திணறி வரும் நிலையில், விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சனுக்கு ஒரு வாய்ப்பு தரலாம் என்று முன்னாள் வீரர் வலியுறுத்தியுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மும்பையில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், நேற்று முன்தினம் விசாகப்பட்டினத்தில் நடந்த 2 ஆவது போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

மும்பை மற்றும் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற ஒருநாள் போட்டிகளில் 4 ஆவது பேட்ஸ்மேனாக சூர்ய குமார் களத்தில் இறங்கினார். இந்த 2 மேட்ச்சிலும் தான் சந்தித்த முதல் பந்தில், மிட்செல் ஸ்டார்க் வேகத்தில் எல்.பி.டபிள்யூ. முறையில் அவர் ஆட்டமிழந்தார். டி20 போட்டிகளில் முன்னணி ஆட்டக்காரராக இருக்கும் சூர்யகுமார் யாதவ், ஒருநாள் போட்டிகளில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நாளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கடைசி ஒருநாள் போட்டி நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரை வெல்லும் என்பதால் இதனை ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்த்துள்ளனர்.

இந்நிலையில் சூர்யகுமார் யாதவுக்கு பதிலாக கடைசி போட்டியில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு தரலாம் என்று முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது- 2 போட்டிகளிலும் சூர்யகுமார் யாதவ் ஒரே மாதிரியாக அவுட் ஆகியுள்ளார். இடது கை பவுலர் வீசும் அதிகவேகத்தில் ஸ்விங் ஆகி வரும் பந்தை வலதுகை ஆட்டக்காரர் எதிர்கொள்வது எப்போதுமே சவாலாகத்தான் இருக்கும். இனிமேல் மிட்செல் ஸ்டார்க் அப்படி பந்துவீசுகிறாரா என்பது குறித்து சூர்யகுமார் கவனமாக இருக்க வேண்டும். ஸ்டார்க் எப்போதுமே ஸ்டெம்பை குறிவைத்து ஸ்விங்காக பந்தை வீசுவார். சூர்யகுமாருக்கு மீண்டும் வாய்ப்பு அளிப்பது குறித்து அணி நிர்வாகம்தான் முடிவு செய்யும். என்னை பொருத்தளவில் சஞ்சு சாம்சனுக்கு ஒரு வாய்ப்பு அளிப்பதில் தவறு ஏதும் இல்லை என்று நினைக்கிறேன். அவர் வாய்ப்பு கிடைத்தபோதெல்லாம் சிறப்பாக விளையாடியுள்ளார். அவர் திறமையான பேட்ஸ்மேன் என்பதில் சந்தேகமில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

First published:

Tags: Cricket